ஏப்ரல்.08., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். மஜக-வினரையும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட அறிவுறுத்தி வருகிறார். அதன்படி தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பாலவாக்கம் பகுதியில் மாவட்ட செயலாளர் பாலவாக்கம் காதர் தலைமையில் மஜக-வினர் இருசக்கர வாகன பேரணியில் கலந்துக்கொண்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்ற பிரச்சார பரப்புரையில் இருசக்கர வாகனத்தில் மஜக-வினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது அந்த பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. மேலும் மஜக மாவட்ட துணைச்செயலாளர் கபீர் அஹமது, நாகூரான் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர் சத்தியன், பகுதி பொருளாளர் காட்வின் துணைச் செயலாளர் மஹபூப் உட்பட திரளான மனிதநேய சொந்தங்கள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தேர்தல்_பணிக்குழு #மனிதநேய_ஜனநாயக_கட்சி #தென்சென்னை_நாடாளுமன்ற_தொகுதி #MJKitWING 05.04.2024.
Author: admin
திருவாரூரில், அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்… திரளான மஜக வினர் பங்கேற்பு…
ஏப்ரல்,08. திருவாரூர் மாவட்டத்தில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வை. செல்வராஜ் அவர்களை ஆதரித்து தீவிரவாக்கு சேகரிபு பிரச்சாரத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா தலைமையில் திரளான மஜக-வினர் பங்கேற்றனர். கொடிகளுடன் திரண்டு ஆர்பரித்த மஜக-வினரின் எழுச்சியை அமைச்சர் உதயநிதி அவர்கள் பார்த்து கைசைத்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகளும் மஜக-வினரின் எழுச்சியை பாராட்டினர். இந்நிகழவில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பொதக்குடி முகமது தாஹிர், மாவட்ட துணை செயலாளர் நத்தர்கணி, அத்திக்கடை ரிஸ்வான், திருவாரூர் ஒன்றிய செயலாளர் அகமது ஜலால், பொதக்குடி கிளை பொருளாளர் ஜலாலுதீன், IKP செயலாளர் அபி கூத்தாநல்லூர் நகர செயலாளர் ஆஷிக், ஆஷிக், மாணவர் இந்தியா கிளை தலைவர் முகமது நசீர் பூதமங்கலம் கிளை செயலாளர், அனுவர்தீன், அப்துல் ரஷீத் ரியாஸ், ஹசன் அலி கமாலுதீன், தண்டபாணி கண்ணன், ஆரிப், உள்ளிட்ட திரளான மஜக-வினர் கலந்து கொண்டனர். தகவல். #மனிதநேய_ஜனநாயக_கட்சி #MJKitWING #தேர்தல்_பணி_குழு #நாகை_பாராளுமன்ற_தொகுதி 06.04.2024.
திருச்சியில் பரப்புரை! இந்திய ஜனநாயகம் இருளில் உள்ளது! அதில் வெளிச்சம் பாய்ச்ச தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்களிப்பீர்! துரை வைகோவுக்கு வாக்கு கேட்டு …. மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பரப்புரை…
ஏப்ரல்.07., திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்கு கேட்டு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அமைச்சர் நேரு அவர்கள் உடனிருந்தார். 'இவர் இது போன்ற நேரங்களில் எப்போதும் நம்மோடு இருப்பவர்' என தலைவர் அவர்களை பற்றி அமைச்சர் நேரு குறிப்பிட்டார். மாலை 3.45 மணிக்கு பாரதி நகரில் பரப்புரையை பலத்த கைத்தட்டல்களுக்கிடையே தலைவர் மு.தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார். VNP தெரு, ஆட்டுமந்தை தெரு, மூவேந்திரர் நகர், சங்குளத்தான் கோவில், காந்திபுரம், சோமராஜபுரம் ஆகிய இடங்களில் அவர் பேசினார். மேற்கண்ட இடங்களில் அவர் பேசிய உரைகளின் சாரம்சம் பின்வருமாறு... பிரதமர் மோடி தமிழ்நாட்டை பாரபட்சமாக பார்க்கிறார். செம்மொழி தமிழ் மொழிக்கு அவர் ஒதுக்கிய வளர்ச்சி நிதியை விட, பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கிய நிதிதான் அதிகம். குஜராத், இமாச்சலப் பிரதேசங்களில் வெள்ளப் பேரிடர்கள் ஏற்பட்டப் போது, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒன்றிய அரசு 971 கோடியை ஒதுக்கியது ஆனால் தமிழ்நாட்டில் வெள்ளப் பேரிடர்கள் ஏற்பட்டப்போது அவ்வாறு செய்யாமல் வஞ்சித்தார்கள். தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் எதிரான அரசு ஒன்றியத்தில் இருக்கிறது. கூட்டாட்சி தத்துவத்தை
நியமனம்
நெல்லை பரப்புரை… ராகு காலம் முடிந்து ராகுல் காலம் தொடங்கிவிட்டது! காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக மாறியிருக்கிறது! மு.தமிமுன் அன்சாரி பேச்சு..
ஏப்ரல்.6., திருநெல்வேலியில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புருஸ் அவர்களுக்கு வாக்கு கேட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாளையங்கோட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை, அமைச்சர் தங்கம். தென்னரசு, முன்னாள் மத்திய அமைச்சர் K.V. தங்கபாலு, தனுஷ்கோடி ஆதித்தன் Ex MP ஆகியோர் பங்கேற்றனர். இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று பேசியதாவது... காங்கிரஸ் கட்சி தந்த பிரதமர்களால் இந்தியாவின் பெருமை சர்வதேச அரங்கில் உயர்ந்தது. மோடியின் தவறான கொள்கைகளால் இந்தியாவின் பெருமை சீர்குலைந்துள்ளது. இந்தியா முன்னேறியுள்ளதாக மோடி கூறுகிறார். அவர் 10 லட்சம் ரூபாய்க்கு கோட் சூட் அணிந்தார். தற்போது அவர் அணிந்துள்ள கூலிங் க்ளாஸின் மதிப்பு 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயாகும். அவர் தான் முன்னேறியுள்ளார். இவரது ஆட்சியில் சிறு, குறு தொழில்கள் லட்சக்கணக்கில் மூடப்பட்டுள்ளது. விவசாயிகள் 16 மாதங்கள் இவரது ஆட்சியில் டெல்லியில் போராடியுள்ளனர். இவர்களது ஆட்சியில் வெளிநாட்டு உணவான பர்கருக்கு GST வரி குறைவாம். குடிசை தொழிலான கடலை மிட்டாய்க்கு அதிக வரியாம். இதுதான் இவர்களது தொழில் கொள்கை. சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் கலவரத்தால் ரத்த சகதியில் மூழ்கியது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட சொந்த நாட்டு மக்களை மோடி போய் பார்த்து ஆறுதல்