மே 9, ஊரடங்கு தருணம் என்பதாலும், கொரோனா அச்சத்தின் காரணமாகவும் அரசு இரத்த வங்கியில் யாரும் இரத்த தானம் செய்ய முன்வராத நிலையில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறையைப் போக்க இளையவேந்தன் இரத்ததான அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் தூத்துக்குடியில் உள்ள அனைத்து குருதிக் கொடையாளர்களையும் அழைத்து அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடைப்பெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹூசைன் தலைமையில் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் ஐந்து நபர்கள் கலந்துக் கொண்டு இரத்த தானம் செய்தனர். மஜக நிர்வாகிகள் அனைவரும் ரமலான் நோன்பு நோற்றிருந்த நிலையில் இரத்ததானம் செய்தனர். அவர்களுக்கு மருத்துவர்களும், சக குருதி கொடையாளர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #தூத்துக்குடி_மாவட்டம்.
Tag: இரத்ததானம்
மனிதநேய கலாச்சார பேரவை துபாய் மாநகரம் சார்பில் இரத்ததான முகாம்!!
நவ.30 ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு துபாய் மாநகர மனிதநேய கலாச்சார பேரவை மற்றும் கேரள கம்யூனிட்டி இணைந்து நடத்திய இரத்ததான முகாம் துபாய் Lathifa Hospital-ல் நடைபெற்றது. இம்முகாமிற்கு அமீரக செயலாளர் மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார். இரத்ததான முகாமை 89.4 FMன் RJ நாகா, அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அமீரக பொருளாளர் H.அபுல் ஹசன், அமீரக து.செயலாளர் A.அசாலி அஹ்மது, அமீரக கொள்கை பரப்பு செயலாளர் Y.அப்துல் ரெஜாக், IT Wing துணை செயலாளர் பொதக்குடி அசார், துபை மாநகர துணைச் செயலாளர்கள் பயாஸ் அகமது,சலீம், செயற்குழு உறுப்பினர் ஆசிப், துபாய் IT WING செயலாளர் N.சபீர் அஹமது மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை துபை மாநகர பொருளாளர் லால்பேட்டை சபீக், அவர்கள் ஒருங்கிணைத்தார் இறுதியாக துபாய் மாநகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இம்முகாமில் திரளானோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்: #MKP_தகவல்தொழில்நுட்பஅணி #MKP_IT_WING #மனிதநேயகலாச்சாரபேரவை #துபாய்_மாநகரம்_UAE 29.11.2019