மார்ச்.13., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அம்மாபட்டிணத்தில் கருப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நடைப்பெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் துணை பொதுச் செயலாளர் மன்னை செல்லசாமி அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். உடன் தலைமை செயற்குழு உறுப்பினர். பேராவூரணி எஸ்.எம்.ஏ.சலாம், மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அபுதாஹீர், ஒன்றியச் செயலாளர் செல்லத்தா, ஜெகதாபட்டிணம் செயலாளர் இர்ஷாத் அஹமத் அதிரை நகர துணைச் செயலாளர் யாசர் அராபத் ஆகியோர் பங்கேற்றனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #புதுக்கோட்டைகிழக்குமாவட்டம் 11-03-2020
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
திருப்பூர் ஷாகின்பாக் தொடர் தர்ணா போராட்டத்தில்.! கொள்கைவிளக்க மாநிலசெயலாளர் கோவைநாசர் அவர்கள் பங்கேற்பு..!
திருப்பூர்.மார்ச்.13, மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டங்களை (CAA, NRC, NPR) கண்டித்தும், சட்டங்களை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் இந்தியா முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது, தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக திருப்பூரில் திருச்சி சாலையில் தொடர் காத்திருப்பு போராட்டம் 27 வது நாளாக மிகுந்த வீரியத்துடன் நடைபெற்று வருகிறது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை T.A.நாசர் அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபல் ரிஸ்வான், பொருளாளர் ஆசீக், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அஸ்கர், துணைச் செயலாளர் யாக்கூப், வர்த்தக அணி பொருளாளர் சேக் ஒலி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர்காதர்கான், மற்றும் கிளை நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பூர்_மாவட்டம் 12-03-2020
மஜக கோவை மாவட்டநிர்வாகிகளுடன் விருந்தோம்பல்!! முதமிமுன் அன்சாரி MLA மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு!!
மார்ச்.02., கோவையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற வாழ்வுரிமை மாநாடு மாபெரும் எழுச்சியுடன் நடைப்பெற்றது. அதற்காக 1மாதமாக தியாக மனப்பான்மையுடன் இரவு பகலாக உழைத்த கோவை மாவட்ட அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கு தலைமையின் சார்பில் விருந்தோம்பல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் பங்கேற்று பேசிய மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி,MLA. அவர்கள் உரையாற்றியதாவது. https://m.facebook.com/story.php?story_fbid=2308524319247330&id=700424783390633 ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியை இம்மாநாடு கண்டுள்ளது செம்மொழி மாநாட்டிற்கு இணையான ஒரு மாநாடென்றால் அது மஜக வின் மாநாடுதான் என பத்திரிக்கையாளர்கள் கூறியதை நினைவூட்டினார். மேலும் இம்மாநாட்டிற்காக கோவையில் மாநில பொருளாளரும் மாநாட்டுக்குழு தலைவருமான எஸ்.எஸ். ஹாருண்ரஷீது, அவர்கள் தலைமையில் பிரச்சாரக்குழு, வரவேற்புக்குழு, நிதிக்குழு, மைதான பணிகள் குழு, உள்ளிட்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு. அந்த குழுக்களின் தொடர் சூறாவளி பணிகளை மிகவும் விலாவரியாக சிலாகித்து பேசினார். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து சொந்த காசுகளை செலவு செய்து தன்னெழுச்சியுடன் பொதுமக்களும், ஜமாத்தினர்களும், திரளாக வருகை தந்ததை பற்றி கூறியவர் அதற்காக உழைத்து தமிழகம் முழுவதும் உள்ள மஜக நிர்வாகிகளின் தியாக உழைப்பை நினைவுபடுத்தினார். தொடர்ந்து நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள் மத்தியில்
தென்னாப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்தைதான் இங்கு நடத்துகிறோம்…! முதமிமுன் அன்சாரி MLA பேச்சு.!
மார்ச்.10, இன்று சென்னை பல்லாவரத்தில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் உரையாற்றினார்.. அப்போது அவர் பேசியதாவது... https://m.facebook.com/story.php?story_fbid=2323959301037165&id=700424783390633 CAA சட்டத்தில் அகதிகளிடம் பாகுபாடு காட்ட கூடாது என்கிறோம். பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளிருந்து இந்தியாவில் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கிறது. ஆனால் இந்திய குடியுரிமை கேட்கும் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கிறது. அவர்கள் மதத்தால், இனத்தால், மொழியால் பாதிக்கபட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களை பறிகொடுத்துவிட்டு 30 ஆண்டுகளை கடந்து அகதிகளாக நம் மண்ணில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை CAA சட்டத்தில் ஏன் சேர்க்க மறுக்கிறீர்கள்? என கேட்கிறோம். அவர்களுக்கு குடியுரிமை கொடுக்ககூடாது என்று தமிழ்நாட்டில் யாராவது சொன்னார்களா..? அகதிகளிடம் பாராபட்சம் காட்ட கூடாது. மனித நேயத்தோடு அவர்களை அணுக வேண்டும். அவர்கள் வாழ்வுரிமையை இழந்து வருகிறார்கள். அவர்களிடம் பேதம் காட்டலாமா? இச்சட்டத்தின்படி, பிஜி தீவிலுள்ள இந்தியர்களோ, ரீ யூனியன் நாட்டை சார்ந்த தமிழர்களோ அகதி அந்தஸ்தை பெற்று குடியுரிமை பெற தகுதி பெற முடியாது. எல்லை நாடுகளை சேர்ந்த மதத்தால் பாதிக்கப்படும் நோபாள், பூட்டான் நாடுகளை சேர்ந்த
வரலாற்றின் புரட்சிகர பக்கங்களை உருவாக்கியவர்கள் பெண்கள்! கோவை ஷாகின்பாக் தொடர் போராட்டத்தில்! மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது எழுச்சியுரை!
கோவை: மார்ச்.08., குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவை ஆத்துப்பாலத்தில் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக நடைப்பெற்று வரும் ஷாகின்பாக் போராட்டத்தில். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது, அவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது டில்லியில் நடைபெறும் ஷாகின் பாக் போன்று கோவையிலும் ஒரு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி, தொடர்ந்து நடத்தி கொண்டி ருக்கின்ற பெண்கள் மத்தியில் பேசுகின்ற பொழுது, வரலாற்றின் புரட்சிகர பக்கங்களை உருவாக்கியவர்கள் பெண்கள் அந்த அடிப்படையில் இந்த போராட்டத்தில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்களும் பங்கேற்று தொடர்ந்து இந்த போராட்டத்தை வலிமைப்படுத்தி வருகின்றீர்கள் என பெண்களை பாராட்டி பேசினார், மேலும் கலவர சூழலை உருவாக்கும் முயற்சியில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த பாசிசவாதிகளுக்கு எதிராக அவர்களின் வழியில் அவர்களை வீழ்த்தி இணக்கமான சூழலை ஏற்படுத்திய கோவை அனைத்து கூட்டமைப்பு நிர்வாகிகளையும் பாராட்டிப் பேசினார். உடன் மாவட்டச் செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் குனிசை ஷாஜகான், மாவட்ட துணைச் செயலாளர் ATR.பதுருதீன், உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.. தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 07-03-2020