டிச.24, இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில், கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் #CAA & #NRC கருப்பு சட்டங்களுக்கு எதிராக, மாபெரும் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைப்பெற்றது. இதில் பங்கேற்று #மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் பேசிய உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு:- இதற்கு முன்பு எத்தனையோ போராட்டங்களை நாம் நடத்தியிருக்கிறோம். ஆனால் இது முற்றிலும் மாறுபட்டது. இது விலைவாசி உயர்வுக்கான போராட்டமல்ல. ரயில் கட்டண, பஸ் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டமல்ல. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டமல்ல. இது வாழ்வுரிமைக்கான போராட்டம். இது குடியுரிமைக்கான போராட்டம். இது தலைவர்களோ, இயக்கங்களோ, கட்சிகளோ நடத்தும் போராட்டங்கள் அல்ல. மக்களே மக்களுக்காக நடத்தும் அறவழிப் போராட்டம்! இந்துக்களும், முஸ்லிம்களும், கிரித்தவர்களும், தலித்துகளும் இணைந்து இந்தியாவை காக்கும் அரசியல் சட்ட உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டம். அதனால் தான் மக்கள் ஆயுதம் கொண்ட படை வீரர்களையே எதிர்த்து நிற்கிறார்கள். இதை எந்த கட்சிகளும் அரசியல் அறுவடையாக நினைத்து பயன்படுத்திட நினைத்திட கூடாது. அனுமதிக்கவும் கூடாது. ஏனெனில் உரிமைக்காக கூடும் கூட்டம் என்பதை எல்லோரும் புரிந்துக் கொள்ள வேண்டும். மக்களுக்காகத் தான் சட்டம். மக்கள்
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
கறுப்புசட்டங்களுக்கு திமுக தலைமையில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி..!
#மஜகசார்பில் 50 ஆயிரம் தண்ணீர் குடுவைகள் விநியோகம்..! சென்னை.டிசம்பர்.23.., இன்று திமுக ஏற்பாட்டில், கூட்டணி கட்சிகள் மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் மத்திய அரசின் CAA, NRC கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்ட திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைப்பெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில், பொருளாளர் ஹாரூன் ரசீது உள்ளிட்ட தலைவர்களும், ஆயிரக்கணக்கான மஜக-வினரும் பங்கேற்றனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களில் நின்றவாறு, 50 ஆயிரம் மினரல் வாட்டர் போத்தல்களை விறுவிறுப்பாக விநியோகித்தவாறு இருந்தனர். மஜக-வினரின் தண்ணீர் விநியோக வாகனங்களை சுற்றி ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்று தண்ணீரை பெற்று தாகம் தீர்த்து கொண்டனர். மஜக-வினரின் இந்த சேவையை தலைவர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் வெகுவாக பாராட்டினர். அது போல் மஜக-வின் ஆம்புலன்ஸ்களும் முதல் உதவிக்காக பேரணியின் வழிகளில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. மஜக இளைஞரணியின் சார்பில் அவசர உதவி மீட்பு குழுவும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. திமுக கூட்டணியின் இப்பேரணிக்கு ஆதரவளித்த, ஆதரவு அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றாக அணிவகுத்தனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பார்வர்டு
இளையான்குடியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்…! மவ்லா நாசர் பங்கேற்பு
#மஜகதலைமைஒருகிணைப்பாளர்மவ்லாநாசர்_பங்கேற்பு..!!! சிவகங்கை.டிச.23.., சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய குடியுரிமை சட்டத்தை கண்டித்து அனைத்து கட்சி, இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தலைமை ஒருகிணைப்பாளர் மவ்லா.நாசர், மாநில துணைச் செயலாளர் திருமங்கலம் சமீம் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள். போராட்டத்தில் மஜக மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகள், இயக்கங்களை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சிவகங்கை_மாவட்டம். 21-12-2019
கறுப்புசட்டங்களை திரும்ப பெறும் வரை சமரசம் இல்லை: முதமிமுன் அன்சாரி MLA காட்டம்!
டிச 22, மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் (MMMK ) சார்பில் நெல்லை மாவட்டம் , மேலப்பாளையத்தில் மத்திய அரசின் கறுப்புச் சட்டங்களை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் , நிறுவன தலைவர் பாளை. ரபீக் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பங்கேற்று உரையாற்றினார். நாடெங்கிலும் நடைபெறும் போராட்டங்களையும்,கிளர்ச்சிகளையும் துப்பாக்கி முனையில் ஒடுக்க முடியாது என்றும், காரணம் இது குடியுரிமைக்கான போராட்டம் என்றும், இதில் சமரசத்திற்கு இடமில்லை என்றார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை மூளை வீங்கி என்று கூறியவர், அதிமுகவின் இன்றைய தலைமை , பொன்மனச் செம்மல் MGR, டாக்டர் ஜெயலிலதா அம்மா ஆகியோரின் கொள்கைகளுக்கு எதிராக செல்கிறது என்று குற்றம் சாட்டினார். இதனால் அதிமுகவின் தொண்டர்களில் பெரும்பாலோர் வேதனையில் உள்ளனர் என்றும் கூறினார்.. ஜனநாயகம் காக்க,நாடு முழுக்க மதங்களை, சாதிகளை கடந்து மக்கள் போராடுகிறார்கள். இப்போது படைப்பாளிகள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் திரை கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள் என எல்லோரும் களத்தில் குதித்ததால், போராட்டம் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டதாகவும், இந்த கறுப்பு சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே, நாட்டில் அமைதி திரும்பும் என்று திட்டவட்டமாக கூறினார். மத்திய அரசு
அரியலூரில் குடியுரிமை சட்டத்திருத்தை கண்டித்து அனைத்து கூட்டமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!!
#மஜக மாநில பொருளாளர் SSஹாரூன் ரசீது பங்கேற்றுகண்டன உரையாற்றினார். டிச.22, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் புதிய குடியுரிமை சட்டத்தை திருத்தம் செய்ய வலியுறுத்தி அனைத்து கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மாநில பொருளாளர் S.S.ஹாருண்ரஷீது அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில் ஜெயங் கொண்டம் ஜமாஅத் தலைவர் முஹம்மது ஷரீப், மஜக மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹீம், அரியலூர் மாவட்ட செயலாளர் A.அக்பர் அலி, பொருளாளர் J.இதயத்துல்லா உள்ளிட்ட மஜகவின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சிகளின் சார்பில் நிர்வாகிகளும் திரளான பொதுமக்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #அரியலூர்_மாவட்டம்.