கறுப்புசட்டங்களுக்கு திமுக தலைமையில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி..!

#மஜகசார்பில் 50 ஆயிரம் தண்ணீர் குடுவைகள் விநியோகம்..!


சென்னை.டிசம்பர்.23..,

இன்று திமுக ஏற்பாட்டில், கூட்டணி கட்சிகள் மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் மத்திய அரசின் CAA, NRC கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்ட திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைப்பெற்றது.

இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில், பொருளாளர் ஹாரூன் ரசீது உள்ளிட்ட தலைவர்களும், ஆயிரக்கணக்கான மஜக-வினரும் பங்கேற்றனர்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களில் நின்றவாறு, 50 ஆயிரம் மினரல் வாட்டர் போத்தல்களை விறுவிறுப்பாக விநியோகித்தவாறு இருந்தனர்.

மஜக-வினரின் தண்ணீர் விநியோக வாகனங்களை சுற்றி ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்று தண்ணீரை பெற்று தாகம் தீர்த்து கொண்டனர்.

மஜக-வினரின் இந்த சேவையை தலைவர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் வெகுவாக பாராட்டினர்.

அது போல் மஜக-வின் ஆம்புலன்ஸ்களும் முதல் உதவிக்காக பேரணியின் வழிகளில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

மஜக இளைஞரணியின் சார்பில் அவசர உதவி மீட்பு குழுவும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

திமுக கூட்டணியின் இப்பேரணிக்கு ஆதரவளித்த, ஆதரவு அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றாக அணிவகுத்தனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் கதிரவன், SDPI கட்சி தலைவர் நெல்லை.முபாரக், விவசாய சங்க தலைவர் PR.பாண்டியன், INTJ தலைவர் பாக்கர் உள்ளிட்ட தலைவர்கள் இரண்டாவது வரிசையில் அணிவகுத்து வந்தனர்.

மஜக-வினர் கொடிகளுடனும், மஜக துண்டுகள் அணிந்தும், மஜக-வின் தொப்பிகள் அணிந்தும் அவேச முழக்கங்கள் எழுப்பியவாறு ஆங்காங்கே பேரணியில் அணிவகுத்து வந்தனர்.

பேரணியில் மஜக-வினரை மாநில துணைச் செயலாளர்கள் அனீஸ், ஷமீம், பொறியாளர் சைபுல்லாஹ், ஷஃபி, ஆகியோருடன் இளைஞரணி செயலாளர் அசாருதீன், மருத்துவ சேவை அணி செயலாளர் பாஷா, மாணவர் இந்தியா மாநில துணைச் செயலாளர் பஷீர், MJTS மாநில தலைவர் பம்மல் சலீம், மாநில கொள்கை விளக்க அணி துணை செயலர் மீரான், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹீர் ஆகியோர் திறம்பட ஒருங்கிணைத்தனர்.

தகவல் தொழில்நுட்ப அணி மாநிலப் பொருளாளர் அமீர் ஜவ்ஹர், துணைச் செயலாளர் தாரிக் ஆகியோர் ஒலிபரப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இப்பேரணியில் மஜக மாவட்டச் செயலாளர்கள், மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் பிஸ்மி, வடசென்னை கிழக்கு மாவட்டம் அன்வர், தென் சென்னை கிழக்கு மாவட்டம் அப்துல் கையூம், செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் ஜிந்தா மதார், வட சென்னை மேற்கு மாவட்டம் தாரிக், மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சாகுல் ஹமீது, திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் நாசர், திருவள்ளுர் மேற்கு மாவட்டம் அக்பர் உசேன் உள்ளிட்டோர் மக்களை திரட்டி வந்தனர்.

மஜக மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மஜக தொண்டர் படையுடன் பேரணியில் பங்கேற்றது பேரணிக்கு வலு சேர்த்து எழுச்சியாக அமைந்தது.

தகவல்;-
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை

Top