அக்.29., மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக செயற்குழு கூட்டம் நேற்று 28/10/2016 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு அமீரக செயலாளர் மதுக்கூர்.S.அப்துல் காதர் அவர்கள் தலைமையில் சார்ஜா மர்கஸில் வைத்து நடைபெற்றது. அமீரக பொருளாளர் அதிரை அஷ்ரப் வரவேற்புரை நிகழ்த்தினார்.கூட்டத்தை இஸ்லாமிய காலச்சார பேரவை(IKP) செயலாளர் திருச்சி அப்துல் ரஹ்மான் அவர்கள் கிராஅத் ஓதி வைத்தும், இஸ்லாத்தில் நற்பண்புகள் குறித்தும் மார்க்க சொற்பொழிவாற்றினார். துபை, அபுதாபி, அல்அய்ன், சார்ஜா உள்ளிட்ட அனைத்து மண்டல நிர்வாகிகளும் கலந்து கொண்ட கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக நிர்வாக வசதிக்காக வேண்டி புதிய நிர்வாகிகளை இனைத்து நிர்வாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி இனி அமீரக நிர்வாகிளாக கீழ்கண்டவர்கள் செயல்படுவார்கள்.. அமீரக செயலாளர் - மதுக்கூர்.S.அப்துல் காதர் மூத்த ஆலோசகர் - M.A.சர்புதீன் பொருளாளர் - அதிரை அஸ்ரப் இஸ்லாமிய கலாச்சார பேரவை. - திருச்சி அப்துல் ரஹ்மான் தகவல் தொடர்பு மற்றும் ஊடகம் - Y.M.ஜியாவுல் ஹக் துணை செயலாளர்கள் : நாச்சிகுளம் A.அசாலி அஹமது K.M.A.முகமது அலி ஜின்னா H.அபுல்ஹசன் Y.அப்துல் ரஜாக் H.M.பதாஹூல்லா ஆகியோர் தேரந்தெடுக்கப்பட்டனர். இஸ்லாமிய கலாச்சார பேரவையின் சார்பாக வார பயான்கள் மற்றும் மாதந்தோறும் தர்பியா வகுப்புகள் அனைத்து மண்டலங்களிலும் தொடர்ச்சியாக நடத்த வேண்டும் எனவும்,
மனிதநேய கலாச்சார பேரவை
மனிதநேய கலாச்சார பேரவை
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் மண்டல ஆலோசனை கூட்டம்…
அக்.29., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மண்டல ஆலோசனைக் கூட்டம் 28/10/2016 (நேற்று) வெள்ளிக் கிழமை முர்காப் ராஜ்தானி ஹோட்டலில் மண்டல செயலாளர் சகோ. ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கிராஅத் கைத்தான் கிளை செயலாளர் சகோ. சர்புதீன், வரவேற்புரை மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் சகோ. அபுபக்கர் சித்திக், நிகழ்த்த இந்நிகழ்ச்சியை மண்டல ஆலோசகர் சகோ. முசாவுதீன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இதில் மண்டல வரவு செலவு விபரங்களை மண்டல பொருலாளர் சகோ. முஹம்மது நபீஸ் அவர்கள் ஒப்படைக்க வரவு செலவு விவரங்கள் சரிபார்க்கபட்டது, இதனை தொடர்ந்து மஜகவில் இணைந்த சகோதரர்கள் தங்களது அறிமுக உரை நிகழ்த்தினார்கள். இதனைத் தொடர்ந்து வரும் டிச.23 ஆம் தேதி குவைத்தில் மண்டல மாநாடு நடத்துவது குறித்து அனைவரிடத்திலும் ஆலோசனைகள் கேட்கப்பட்டு அதற்கான முன் ஏற்பாடுகள் குறித்து மண்டல ஆலோசகர் சகோ. முசாவுதீன் அவர்கள் விளக்கினார். மாநாட்டின் பணிகளுக்கு பல்வேறு குழுக்கள் தேர்வு செய்து மாநாடு சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இறுதியாக சால்வா கிளை பொருலாளர் சகோ முகம்மது மன்சூர் அவர்கள் நன்றியுரை கூறி துஆவுடன் நிறைவு பெற்றது. தகவல்