பிப்.08., மத்திய அரசின் பாரபட்ச குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து ஈரோட்டில் அனைத்து கூட்டமைப்பு சார்பில் இரண்டாம் கட்டமாக தேசம் காக்கும் ஒற்றுமை பேரணி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மவுலானா உமர் பாரூக், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் பாபு சாகின்ஷா, திமுக சார்பில் கொள்கை பரப்பு துணை செயலாளர் சந்திரகுமார், காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரகுராமன், மமக மாநிலச் செயலாளர் சாதிக், SDPI மாநில பொருளாளர் அபுதாகிா்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி, உள்ளிட்ட அரசியல் கட்சி மற்றும் முற்போக்கு இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கலைமகள் கல்வி நிலையம் முதல் வ உ சி பூங்கா வரை நடைப்பெற்ற இப்பேரணியில் பெண்கள், குழந்தைகள், உள்பட ஆயிரக்கணக்கானோர் தேசிய கொடிகளுடன் கலந்து கொண்டனர் மேலும் 600அடி நீளமுள்ள பிரம்மாண்ட தேசிய கொடியுடன் பேரணி சென்றது அங்கு கூடிய பொதுமக்களுக்கு உற்சாக மூட்டியது நான்கு கிலோ மீட்டர் வரை தொடர்ந்த இப்பேரணி அமைதியான முறையில் சென்றது. இறுதியில் வ உ சி
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
முன்பு ரஜினி பாரதிராஜா இயக்கத்தில் நடித்தார்.! இப்போது பாரதீயஜனதா இயக்கத்தில்! முதமிமுன் அன்சாரி MLA பேட்டி..!!
சென்னை.பிப்.7.., இன்று சென்னை மண்ணடி மெட்ரோ அருகில், குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைப்பெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், பாஜக-வுக்கு உடன்படும் காரணத்தால், வருமான வரித்துறையின் நெருக்கடிகளிலிருந்து ரஜினிகாந்த் காப்பாற்றப்படுகிறார் என்றும், பாஜக-வுக்கு உடன்படாத காரணத்தினால் நடிகர் விஜய் வருமான வரித்துறையின் நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்படுகிறார் என்றும் கூறினார். அப்படி தொடர்ந்து நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுத்தால், தமிழக மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள் என்றார். ரஜினிகாந்த் அவர்கள் குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு ஆதாரவாக பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், முன்பு ரஜினிகாந்த் பாரதிராஜா படத்தில் நடித்தார், இப்போது பாரதீய ஜனதா இயக்கத்தில் நடிப்பதாக கூறினார். அந்தப் படங்கள் ஒடியது என்றவர், இந்த படங்கள் ஓடாது என்றும் கூறினார். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #மத்தியசென்னைகிழக்கு_மாவட்டம் 07-02-2020 https://m.facebook.com/story.php?story_fbid=2260785704021192&id=700424783390633
நாகூரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கத்தில் மஜக பங்கேற்பு!
பிப்.06, தமிழகம் முழுவதும் CAA, NRC, NPR ஆகியவற்றிற்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. நாகை மாவட்டம், நாகூரில் நடைப்பெற்ற கையெழுத்து இயக்கத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், சுற்றுசூழல் மற்றும் மனித உரிமைகள் அணி செயலாளர் ஆரிப், நகர செயலாளர் அபுசாலி சாகிப், பொருளாளர் சாகுல், ஜாகீர் ஹீசைன் உள்ளிட்டோர் தலைமையில் மஜகவினர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இதில் பல்வேறு கட்சி, அமைப்புகளின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #நாகைதெற்குமாவட்டம்.
கறுப்புசட்டங்களுக்கு எதிராக போராடி வரும் டெல்லி மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் RSSபயங்கரவாதிகளை கைது செய்ய மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை.பிப்.05.., CAA, NRC, NPR போன்ற கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் RSS, ABVP பயங்கரவாதிகளை கைது செய்ய வலியுறுத்தி. சென்னை தி-நகர் பேருந்து நிலையம் அருகில் 04-02-2020 அன்று மாலை கறுப்பு சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைப் பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்கள் மேலும் முன்னாள் வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி மற்றும் INTJ பொதுச்செயலாளர் சித்திக் உள்ளிட்டவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர். இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் மீரான், மாவட்டச் செயலாளர் காதர் உள்ளிட்ட பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட மஜகவினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 04-02-2020
கடலூரில் கறுப்பு சட்டங்களுக்கெதிராக திரண்ட பெண்கள், தைமியாபங்கேற்று கண்டன உரை!!
பிப். 03, கடலூர் மஞ்சக்குப்பத்தில் பெண்கள் திரளாகப் பங்கேற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான MJK, MAT, NWF ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் N.A தைமியா அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மஜக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.முகமது யூசுப், கடலூர் நகர செயலாளர் இலியாஸ், மாவட்ட மீனவரணி செயலாளர் முஹம்மது சேட், மீனவரணி துணைச் செயலாளர் சுல்தான், முஜம்மில், சதாம், பண்ருட்டி யாசீன், டவுன்ஷிப் ரியாஸ், அண்ணாகிராமம் ஒன்றிய செயலாளர் ரஹீம் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் திரளாக மஜகவினர் மற்றும் பெண்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கடலூர்வடக்குமாவட்டம். 02/02/2020