கறுப்புசட்டங்களுக்கு எதிராக போராடி வரும் டெல்லி மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் RSSபயங்கரவாதிகளை கைது செய்ய மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம்


சென்னை.பிப்.05..,

CAA, NRC, NPR போன்ற கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வரும் RSS, ABVP பயங்கரவாதிகளை கைது செய்ய வலியுறுத்தி.

சென்னை தி-நகர் பேருந்து நிலையம் அருகில் 04-02-2020 அன்று மாலை கறுப்பு சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைப் பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்கள்

மேலும் முன்னாள் வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி மற்றும் INTJ பொதுச்செயலாளர் சித்திக் உள்ளிட்டவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.

இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் மீரான், மாவட்டச் செயலாளர் காதர் உள்ளிட்ட பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட மஜகவினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
04-02-2020

Top