புதுக்கோட்டை.பிப்.13.., மத்திய அரசு கொண்டுவந்துள்ள கறுப்பு சட்டங்களுக்கு எதிராக அறந்தாங்கியில் பிப்ரவரி 11 அன்று வாவுசி திடலில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொகூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநிலப் பொருளாளர் எஸ்எஸ்.ஹாரூன் ரசீத் அவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்கள். மேலும் ஐயா தர்மயுகவழி பேரவை தலைவர் பாலமுருகன், YMJ தலைவர் அல்தாஃபி, சுந்தரவள்ளி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் முபாரக் அலி தலைமையில் மஜகவினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #புதுக்கோட்டை_மாவட்டம் 11-02-2020
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
டெல்லி தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு இது மற்றொரு பாடம்! முதமிமுன்அன்சாரி MLA அறிக்கை!
இந்திய தலைநகர் டெல்லியின் சட்டமன்றத்திற்கு நடைப்பெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. CAA உள்ளிட்ட குடியுரிமை திருத்த ஆதரவு பரப்புரையை தீவிரமாக பாஜக முன்னெடுத்தது. அதன் தலைவர்களின் பேச்சுகள் தீயை கக்கின. ஆனால்,வளர்ச்சி திட்டங்களை மட்டுமே முன்னிறுத்தி ஆம் ஆத்மி பரப்புரை செய்தது. அந்த அணுகுமுறையை டெல்லி மக்கள் ஆதரித்துள்ளனர். இந்தியாவின் எல்லா மாநில மக்களும் வசிக்கும் தலைநகரில் வெளியாகியிருக்கும் இத்தேர்தல் முடிவுகள் மிக முக்கியமானதாகும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தல், வெறியூட்டும் பரப்புரை, வன்முறையை தூண்டும் முயற்சிகள் என பாஜக எடுத்த கொல்லைப்புற அரசியலுக்கு டெல்லி மக்கள் எதிராக திரும்பி உள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் நிலையில், ஆளும் கட்சிக்கு எதிராக அதிருப்தி வருவது இயல்பு. வாக்குப்பதிவும் முந்தைய தேர்தலை விட குறைந்திருந்தது. இந்த நிலையிலும் கூட மக்கள் பாஜக வின் "தாமரை "யை விட, ஆம் ஆத்மியின் "துடைப்பம் " சின்னம் நாட்டுக்கு நல்லது என முடிவு செய்திருக்கிறார்கள். சமீபத்தில் நடைப்பெற்ற ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவை தொடர்ந்து, டெல்லி தேர்தல் முடிவும் பாஜகவுக்கு
காந்திதேசத்தை கோட்சே தேசமாக மாற்றஅனுமதிக்கமாட்டோம்.! முதமிமுன் அன்சாரி MLA பேச்சு.!!
விருதுநகர்.பிப்.10.., விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் தோழர் கனகராஜ், தங்கபாண்டியன் MLA , மவ்லவி அபுபக்கர் பாகவி உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு... குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிரான போராட்டம் மாணவர்களை கடந்து, மக்கள் போராட்டமாக இப்போது மாறிவிட்டது. தமிழகத்தில் திமுக நடத்திய குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் கிராமம், கிராமமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக திமுக-வுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். யார் இதற்காக போராடினாலும் அதை ஆதரித்து வலுப்படுத்த வேண்டும். இனி இப்போராட்டங்களை "குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிரான கூட்டியக்கம்" அல்லது "கறுப்பு சட்டங்களுக்கு எதிரான போராட்ட குழு" என்ற பொது பேனர் களில் முன்னெடுப்பதே அறிவார்ந்த அணுகுமுறையாக இருக்கும். தயவு செய்து இதைப் புரிந்துக் கொண்டு அதன் படி செயலாற்றுங்கள். மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக இப்போராட்டம் 2024 வரை கூட தொடரலாம். எனவே உறங்குவதற்கும், உண்ணுவதற்கும், சம்பாதிப்பதற்கும் நேரம் ஒதுக்குவது போல, இனி தினமும் வாழ்வுரிமைக்காக போராடுவதற்கும் நேரம்
உயிரைவிடஉரிமை மேலானது,தஞ்சை பொதுக்கூட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் முதமிமுன் அன்சாரி MLA பேச்சு.!
தஞ்சை.பிப்.9., தஞ்சாவூரில் மத்திய அரசின் குடியுரிமை தொடர்பான கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கூட்டியக்கம் சார்பில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் ரமணி, தமுஎச அமைப்பை சேர்ந்த சுந்தரவள்ளி, அய்யாவழி தர்மயுக வழிப்பேரவை நிறுவனர் பாலமுருகன் சுவாமிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதில் பங்கேற்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது... நாம் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடி வருகிறோம். சமூக நீதியை, சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க குரல் கொடுக்கிறோம். இதை புரிந்துக் கொண்டு இப்போது எல்லா மக்களும் களத்தில் இணைய தொடங்கி விட்டார்கள். இது மாபெரும் மக்கள் எழுச்சியாக மாறி விட்டது.. இப்போராட்டம் உடனடியாக முடிவது போல தெரியவில்லை. மத்திய அரசு பிடிவாதம் காட்டுகிறது. எனவே நீண்ட நெடிய போராட்டத்திற்கு தயாராக வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. நமது நேரம், பொருளாதாரம், உழைப்பு அனைத்திலும் பெரும்பகுதியை செலவிட வேண்டியது தவிர்க்க முடியாதது. நம் நாட்டின் விடுதலை போராட்டம் ஒரிரு வருடங்களில் முடியவில்லை. அது நூற்றாண்டை தாண்டி நடைப்பெற்றது. அது போல இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம். பாஸிஸ்ட்டுகளிடமிருந்து நாட்டை மீட்கும் அறப்போராட்டம். நம் முன்னாள் இரண்டு தான் உள்ளது. அநீதிகளையும், உரிமைப்
குடியுரிமை மறுக்கப்பட்டு முகாம்களில் உள்ளவர்கள் குறித்து ரஜினியின் நிலை என்ன.? எஸ்எஸ்ஹாரூன் ரசீது கேள்வி…!
திருவள்ளூர்.பிப்.08.., அனைத்து ஜமாத்தார்கள் மற்றும் இயக்கங்கள், கட்சிகள் ஒருங்கிணைந்து கறுப்பு (CAA, NRC, NPR) சட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் சென்னை அம்பத்தூரில் நேற்று (07.02.2020) மாலை நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இக்கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய ஹாரூன் ரசீது அவர்கள் CAA-வால் முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால் இந்த ரஜினி முதல் ஆளாக குரல் கொடுப்பான் என்று ரஜினி கூறுகிறார். அப்படி என்றால்... முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது குடும்பத்தாருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது குறித்து ரஜினி என்ன சொல்கிறார். கார்கில் போரை தலைமை தாங்கி நடத்திய ராணுவ வீரர் சனாவுல்லா குடியுரிமை பறிக்கப்பட்டது குறித்து ரஜினி என்ன சொல்கிறார், முன்னாள் முதல்வர் தைமூர் குடியுரிமை மறுக்கப்பட்டது குறித்து ரஜினி என்ன சொல்கிறார் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். இக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் அமைப்புகள் சார்பில் தலைவர்கள் ஜமாத்தார்கள், மஜக திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அக்பர் உசேன், மாவட்டப் பொருளாளர் பக்ருதின், மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் ஷாகுல்