காந்திதேசத்தை கோட்சே தேசமாக மாற்றஅனுமதிக்கமாட்டோம்.! முதமிமுன் அன்சாரி MLA பேச்சு.!!


விருதுநகர்.பிப்.10..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில் தோழர் கனகராஜ், தங்கபாண்டியன் MLA , மவ்லவி அபுபக்கர் பாகவி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இதில் பங்கேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு…

குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிரான போராட்டம் மாணவர்களை கடந்து, மக்கள் போராட்டமாக இப்போது மாறிவிட்டது.

தமிழகத்தில் திமுக நடத்திய குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் கிராமம், கிராமமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக திமுக-வுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

யார் இதற்காக போராடினாலும் அதை ஆதரித்து வலுப்படுத்த வேண்டும்.

இனி இப்போராட்டங்களை “குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிரான கூட்டியக்கம்” அல்லது “கறுப்பு சட்டங்களுக்கு எதிரான போராட்ட குழு” என்ற பொது பேனர் களில் முன்னெடுப்பதே அறிவார்ந்த அணுகுமுறையாக இருக்கும். தயவு செய்து இதைப் புரிந்துக் கொண்டு அதன் படி செயலாற்றுங்கள்.

மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக இப்போராட்டம் 2024 வரை கூட தொடரலாம்.

எனவே உறங்குவதற்கும், உண்ணுவதற்கும், சம்பாதிப்பதற்கும் நேரம் ஒதுக்குவது போல, இனி தினமும் வாழ்வுரிமைக்காக போராடுவதற்கும் நேரம் ஒதுக்கிட வேண்டும்.

நாட்டின் பொருளாதார சீர்குலைவை திசை திருப்பவே, மத்திய பாஜக அரசு குடியுரிமை கறுப்பு சட்டங்களை கொண்டு வந்து மக்களை குழப்புகிறது.

CAA சட்டத்தில் ஈழத் தமிழர்களை, நேபாள் மற்றும் பூட்டான் கிறித்தவர்களை, பர்மா ரோஹிங்யாக்களை புறக்கணிக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்பவர்கள், அண்டை நாட்டு அகதிகளிடம் பாராபட்சம் காட்டலாமா?

எல்லைகளை கடந்து ஆடு, மாடு, நாய், நரி, காக்கா வரலாம். ஆனால் வாழ்வை இழந்து அகதிகளாக வரும் மனிதர்களை தடுக்கலாமா?

https://m.facebook.com/story.php?story_fbid=2267187333381029&id=700424783390633

அகதிகளிடம் பாராபட்சம் காட்டி தடுப்பது நியாயமா? மனிதாபிமானமா?

புத்தரும், மகாவீரரும், விவேகானந்தரும், திருவள்ளுவரும், கனி பூங்குன்றனாரும் பிறந்த மண்ணல்லவா இது?

காந்தி தேசத்தை கோட்சே தேசமாக மாற்ற நாம் அனுமதிக்க கூடாது.

NRC சட்டம் மூலம் அஸ்ஸாமில் 12 லட்சம் இந்துக்கள் உட்பட 19 லட்சம் மக்கள் குடியுரிமை இழந்திருக்கிறார்கள்.

இதை நாடு முழுக்க அமல்படுத்த எதிர்ப்பு வந்ததும், NPR சட்டத்தை செயல் படுத்துவோம் என்கிறார்கள். இதை காங்கிரஸ் தான் கொண்டு வந்தது என பொய் சொல்கிறார்கள்.

காங்கிரஸ் கொண்டு வந்த NPR-ல் 15 கேள்விகள் தான் இருந்தது. இவர்கள் NRC-யில் உள்ள பாட்டன், பூட்டன் ஆவணங்கள் தொடர்பான கேள்விகளை NPR-ல் இணைத்து, கொல்லைப்புற வழியாக NRC-யை அமல்படுத்த முனைகிறார்கள்.

இது அனைத்து மக்களுக்கும் எதிரானது.

எனவேதான் சொந்த மக்களை அகதிகளாக மாற்றும் வஞ்சக திட்டங்களுக்கு எதிராக போராடுகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஆண்கள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மேலும் மஜக மாவட்டச் செயலாளர் கண்மணி காதர், பொருளாளர் பாதுஷா, மாவட்ட துணைச் செயலர்கள் இப்ராகிம்ஷா, அப்துல் காதர் ஜெய்லானி, நகரச் செயலாளர் ரஹ்மத்துல்லா, மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் முருகேசன் ராஜா, சிவகாசி நகரச் செயலாளர் இக்பால் மைதீன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#விருதுநகர்_மாவட்டம்
09-02-2020