வாழ்வுரிமை மாநாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்க செய்வோம்! மஜக நாகை செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்!!


பிப்.10,
மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நாகை SMY திருமண மண்டபத்தில் மாவட்டச் செயலாளர் செ.செய்யது ரியாசுதீன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மஜக துணை பொதுச்செயலாளர் N.A தைமியா, மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

பிப்.29, கோவையில் தமிழகம் தழுவிய அளவில் மக்கள் திரளும், தேசிய தலைவர்கள் பங்கேற்கும் வாழ்வுரிமை மாநாட்டிற்கு நாகை தெற்கு மாவட்டத்தின் ஒவ்வொரு கிளையின் சார்பிலும் பொதுமக்களை திரளாக அழைத்து வருவது என தீர்மானிக்கப்பட்டு அதற்காக தெருமுனைக் கூட்டங்கள், தனிநபர் மற்றும் குழுசந்திப்புகள், வாகனத்திற்கான நிதி மற்றும் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுப்படுவது என தீர்மானிக்கப்பட்டு புதிய உத்வேகத்துடன் செயல்வீரர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் S.சதக்கத்துல்லா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் அ.ஷேக் மன்சூர், மாவட்ட துணைச் செயலாளர்கள் கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, முன்ஷி யூசுப்தீன், சபுருதீன், சேக்அகமதுல்லா, அணி செயலாளர்கள் தெத்தி A.M ஆரிப், Rex சுல்தான், ஒன்றிய செயலாளர்கள் அன்வர்(திருமருகல்), N.ஜலாலுதீன்(நாகை), அஸ்ரப் அலி(கீழையூர்), நகர செயலாளர்கள் அஜூஜுர் ரஹ்மான்(நாகை), அபுசாலி சாஹிப்(நாகூர்), வேதை முருகானந்தம், திட்டச்சேரி பேரூர் செயலாளர் முஹம்மது இப்ராஹிம், கிளை செயலாளர்கள் திருப்பூண்டி அஜீஸ், ஜாசிம், பாவா பகுருதீன், யாசின், சாகுல், பிரவீன், ஷேக்அலி, நிர்வாகிகள் மஹ்மூது இபுராகிம், வல்வாலடி அன்சாரி, மஞ்சை சதாம், நாகூர் சாகுல், ஜாகீர், முரளி, ஹாஜி.அப்துல் காதர், அப்துல், கேப்டன் அமிருதீன் மற்றும் மஜகவின் பல்வேறு கட்ட நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகைதெற்குமாவட்டம்.
09/02/2020