வேலூர்.பிப்.10.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் A.முஹம்மத் யாஸின் தலைமையில் நடைபெற்றது.
இதில் மஜக மாநில துணைச் செயலாளர் S.G.அப்சர் சையத் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பிப்ரவரி -29ஆம் தேதி அன்று கோவையில் நடைபெறவுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாழ்வுரிமை மாநாட்டு பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர்கள் சையத் உசேன், I.S.முனவ்வர் ஷரிப் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மாவட்டம்
09.02.2020