மஜக கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்!! தலைமை நிர்வாகிகள் எழுச்சியுரை!!

பிப்.09.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் வாழ்வுரிமை மாநாடு குறித்து கோவை மாநகர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மஜக மாநில பொருளாளரும் மாநாட்டு குழு தலைவருமான எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது, மாநாட்டு குழு உறுப்பினர்கள் இணை பொதுச்செயலாளர் J.S.ரிபாயி, துணை பொதுச்செயலாளர் சையது அஹமதுபாருக், கோவை சுல்தான்அமீர், ஆகியோர் பிப்ரவரி 29ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாழ்வுரிமை மாநாட்டு பணிகள் குறித்து தொண்டர்கள் மத்தியில் எழுச்சியுரை யாற்றினார்கள்.

இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் குனிசை ஷாஜகான், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ஜாபர், திருப்பூர் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், ABT.பாருக், சிங்கை சுலைமான், முஸ்தபா, அபு, மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பகுதி, கிளை, நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் இறுதியில் குடியுரிமை சட்டத்திற்கெதிராக பிப்ரவரி 29 ஆம் தேதி கோவையில் லட்சக்கணக்கான மக்களை திரட்டுவோம் என்ற உறுதியுடன் தொண்டர்கள் உற்சாகத்துடன் சென்றனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
08.02.2020