திருச்சி.பிப்.10,
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் A.R.S.அஸ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது.
இதில் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், மாநில துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன், மாநில துணைச் செயலாளர்கள் திருமங்கலம் சமீம் அகமது, துரை முஹம்மது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பிப்ரவரி -29 அன்று கோவையில் நடைபெற உள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான “வாழ்வுரிமை மாநாட்டு” பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் சேக் தாவூத், தர்ஹா பாரூக், மைதீன், புரோஸ் கான், ஆண்டனிராஜ், கிருஷ்ணமூர்த்தி, அப்துல்லா, முஸ்தபா, அரியமங்கலம் காதர், ஷாஜஹான், ஆழ்வார்தோப்பு காதர், பீர்சா, அபு, ஜமால், அபுபக்கர் சித்திக், உள்ளிட்ட நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருச்சி_மாவட்டம்
9-02-2020