மஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்…!! மாநில துணைசெயலாளர் பங்கேற்பு..!

திருவள்ளூர்.பிப்.10..,

மனிதநேய ஜனநாயக கட்சியின் வாழ்வுரிமை மாநாடு மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாக கட்டமைப்பு குறித்து மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் S.M.முஹம்மத் நாசர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மஜக மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ் கலந்து கொண்டு பிப்ரவரி 29-ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாழ்வுரிமை மாநாட்டு பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்டப் பொருளாளர் ஜாபர் சாதிக், நிஜாம், மஸ்தான், ஜீலானி, மெளலானா. அப்ரார், ஷாஹின்ஷா, வெங்கடேஷ் உள்ளிட்ட நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவள்ளூர்கிழக்குமாவட்டம்
10.02.2020