பிப்.19., குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கோவை மாவட்ட அனைத்து கூட்டமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சகோதரர் இருசக்கர வாகனத்தில் போராட்டத்திற்காக வரும்போது விபத்து ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீது, இணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிபாயி, ஆகியோர் உடனடியாக கோவை அரசு மருத்துவ மனைக்கு சென்று பாதிக்கப்பட்ட சகோதரரை சந்தித்து அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் அவர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்நிகழ்வில் மாநில, கோவை மாவட்ட நிர்வாகிகள், உடன் இருந்தனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாவட்டம் 19.02.2020
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
அரசியலில் கொரோனா வைரஸ்கள் பரவுகிறது! நாங்கள் கேட்டது மருந்து.. நீங்கள் இனிப்புகளை தந்துள்ளீர்கள்.. முதமிமுன்அன்சாரி MLA பேட்டி..!
சென்னை.பிப்.19, மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, கூட்டமைப்பு சார்பில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற சட்டமன்றம் நோக்கிய பேரணி, இன்று நடைபெற்றது. இதில் முஸ்லிம் லீக் தலைவர் பேரா. காதர்மொய்தீன்,காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற துணைத் தலைவர் பிரின்ஸ் MLA, மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA, வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ், CPM நிர்வாகி கனகராஜ், CPI நிர்வாகி மு.வீரபாண்டியன் ,அபூபக்கர் MLA, திமுக துணைப் பொதுச் செயலாளர் VP.துரைசாமி,மஜக துணைப் பொதுச் செயலாளர் தைமியா, Spdi தலைவர் நெல்லை முபாரக், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு INTJ தலைவர் பாக்கர் , உள்ளிட்டோர் பேரணியில் முன் வரிசையில் அணிவகுத்தனர. காலை 9 மணியில் இருந்தே போக்குவரத்து ஸ்தம்பிக்க தொடங்கியது. காவல்துறையே சட்டமன்றத்தை முற்றுகையிட்டு வளையம் அமைத்தது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக அமைந்தது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சுற்றிலும் நாலாபுறமும் உள்ள சாலைகளில் மக்கள் ஆர்ப்பரித்து திரண்டனர், பெண்கள் குழந்தைகளுடன் திரண்டு வந்து முழக்கங்களை எழுப்பினர். சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி MLA, பிரின்ஸ் MLA, அபூபக்கர்
CAA, NRC,NPR சட்டங்களுக்கு எதிராக காங்கேயம் மஜக முன்னெடுத்த தர்ணா போராட்டம்.!
பிப்.19., திருப்பூர் மாவட்டம். காங்கேயம் நகரில் CAA NRC NPR சட்டங்களுக்கு எதிராக காங்கேயம் நகரில் மஜக சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. போராட்டம் அறிவிப்பு செய்யப்பட்டவுடன் காவல்துறை தரப்பில் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது . அச்சுறுத்தல்களையும் மீறி தடைகளை உடைத்து மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. தர்ணா போராட்டத்திற்கு காங்கேயம் நகர செயலாளர் அபுதாகிர், அவர்கள் தலைமை தாங்கினார். நகர பொருளார் அப்பாஸ், வரவேற்புரை யாற்றினார். போராட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக வ புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பு நிர்வாகிகள் கன்னுசாமி, கவி விடியல், ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிறைவாக கண்டன உரையாற்றிய மஜக திருப்பூர் மாவட்ட செயலாளர் இ.ஹைதர்அலி அவர்கள் கருப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தார். இதில் மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது, மாவட்ட துணைச் செயலாளர்கள் முஜிபுர் ரகுமான், ராயல் பாட்சா ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். நகர துணைச் செயலாளர் ஜெய்லானி அவர்களின் நன்றியுரையுடன் தர்ணா போராட்டம் நிறைவுபெற்றது. காங்கேயத்தில் நடந்த இந்த போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருப்பூர்_மாவட்டம். 18-02-2020
குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றம் முற்றுகை..! முதமிமுன் அன்சாரி MLA அழைப்பு!
தமிழகத்தில் CAA, NRC, NPR உள்ளிட்ட கறுப்பு சட்டங்களை அமுல்படுத்தமாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி 'மாபெரும் சட்டமன்றம் முற்றுகைப் போராட்டம்' கூட்டியக்கம் சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அழைப்பு!
தேவையற்ற பேச்சுகள், முழக்கங்களைப் தடுக்க வேண்டும்! முதமிமுன் அன்சாரி MLA பேச்சு!
சென்னை.பிப்.18, சட்டமன்றத்திற்கு வண்ணாரப்பேட்டை போலிஸ் அத்துமீறலை கண்டித்து பதாகை ஏந்தி வந்து, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்மொழிந்து இவ்விவாகரம் தொடர்பான கருத்துகளை, மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA ஆணித்தரமாக எடுத்துரைத்தார். இதற்கு முதல்வரின் பதில் திருப்தியளிக்கவில்லை என்று கூறிவிட்டு, வெளிநடப்பு செய்தவர், எங்கள் உணர்வுகள் நிராகரிக்கப்பட்டதால், பிப்-19 அன்று 1 லட்சம் பேருடன் சட்டமன்றத்தை முற்றுகையிடுவோம் என அறிவித்தார். அதன் பிறகு நேராக வண்ணாரப்பேட்டை "ஷாஹின் பாக்" போராட்ட களத்துக்கு சென்றார். அங்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு அவர் பேசியதாவது.. உங்கள் மீதான வன்முறைகளை கண்டித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசினேன். முதல்வர் அவர்கள் அதிகாரிகள் எழுதி கொடுத்ததை பேசி, தவறான தகவலை அவைக்கு கொடுத்தார். அதனால் அதை கண்டித்து வெளிநடப்பு செய்து விட்டு, நேராக இங்கே வந்துள்ளேன். இங்கு போக்குவரத்துக்கு தொந்தரவு இல்லாமல், தங்கள் வீதிக்குள் மக்கள் போராடுகிறார்கள். குழந்தைகளோடு பெண்கள் களமாடுகிறார்கள். இது வலிமை மிக்க மக்கள் எழுச்சியாகும். போக்குவரத்துக்கு தொந்தரவு இல்லாமல், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கண்ணியமாக உரிமைகளுக்காக போராடுகிறீர்கள். உங்களை அத்துமீறி காவல்துறை தாக்கியதும், இரவு 10 மணி, 11 மணி என்று கூட பாராமல் தமிழகமெங்கும் 300-க்கும்