வேலூரில் ஜூம்மா மசூதியில் ஜூம்மா தொழுகைக்கு பிறகு மக்களிடம் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்த வெற்றி வேட்பாளர் ஹாரூன் ரசீது...
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
வேலூர் 58-வது வார்டுக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மஜக வேட்பாளர் SS.ஹாரூன் ரஷீத் அவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரம்
இறைவனுக்கு பயந்தவராய், உண்மையின் உரைகல்லாய்,மக்கள் பணியில் சிகரமாய்,நட்பில் உயர்ந்தவராய், மக்கள் நலனில் அக்கரை கொண்டவராய்,வாக்கு தவறாதவறாய்,பொது வாழ்வில் சிறந்தவராய்,ஏழைக்கு தோழனாய்,வேலூரின் வேந்தராய் வளம் வரும் நமது வெற்றி வேட்பாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது 58வது வார்டுக்குட்பட்ட வசந்தபுரம், அவுலியா நகர், நேரு நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனல் பறக்கும் பிரச்சாரம்... #ADMK_MJK #VOTE_FOR #வேலூர்_எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது
வேலூர் தொகுதி 52-வது வார்டு பகுதியில் S.S.ஹாருன் ரசீது வாக்கு சேகரிப்பு…
ஏப்.30., வேலூர் தொகுதிக்குட்பட்ட 52-வது வார்டு பகுதியில் அதிமுக+மஜக கூட்டனி கட்சி வேட்பாளர் S.S.ஹாருன் ரசீது அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்கள். உடன் அதிமுக மாவட்ட பொருளாலர் நீலகண்டன் அவர்களும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் அவர்களும் அதிமுக+மஜக மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு
மஜகவின் வெற்றி வேட்ப்பாளர்கள் S.S.ஹாரூன் ரஷீத் மற்றும் M.தமிமுன் அன்சாரி ஆகியோறது வேட்ப்பு மனு ஏற்பு…
மஜக வேட்பாளர்கள் இன்று வேட்ப்பு மனு தாக்கல்…
ஏப்.28.,மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளான வேலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் இன்று(28-04-2016) வேட்ப்பு மனு தாக்கல் செய்தனர். இதில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் மஜகவின் மாநில பொருளாளர் S.S.ஹாருன் ரஷீத் அவர்கள் வேலுரிலும், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் மஜகவின் மாநில பொதுச்செயலாளர் M. தமீமுன் அன்சாரி அவர்கள் நாகப்பட்டினத்திலும் வேட்ப்புமனுவை தாக்கல் செய்தனர். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள், மஜகவின் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளைகழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமாக கலந்துகொண்டனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு