புதுடெல்லி.பிப்.21., இன்று தலைநகர் டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்கள், மாணவிகள், முன்னாள் மாணவர்கள் என அனைவரும் அமைதி பேரணி நடத்தினர். இதற்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன், பொருளாளர் ஹாருண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களுடன் மாநில துணைச் செயலாளர்கள் ஷமீம் அஹ்மது, நாகை முபாரக் ஆகியோரும் உடன் பங்கேற்றனர். அப்பகுதி முழுவதும் No CAA, No NRC, No NPR என்ற வாசகங்களும், அரச வன்முறைகளை கண்டித்து முழக்கங்களும் எழுதப்பட்டிருந்தன. நிரந்தரமாக மாணவ, மாணவிகள் அந்த சாலை முழுவதும் கூடாரம் அமைத்து தங்கள் மீது நடத்தப்பட்ட போலிஸ் வன்முறைகளை கண்டித்து போராடி வருவதை பார்க்க முடிந்தது. அந்த கடும் குளிரிலும் பெரும் கூட்டம் அமைதியாக, கட்டுக்கோப்பாக அணிவகுத்தனர். கடும் குளிரிலும் நெருப்பாய் தகிக்கிறது டெல்லியின் வீதிகள். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #டெல்லி_முகாம் 21-02-2020
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
டெல்லியில் நடைபெற்ற கறுப்பு சட்ட எதிர்ப்பு போராட்டத்தில்.! மஜக மாநில துணைச் செயலாளர்கள் பங்கேற்பு..!
டெல்லி.பிப்.21.., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களுக்கு பூனே உலக அமைதிப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மாணவர் பாராளுமன்றம் இணைந்து வழங்கும் "முன்மாதிரி இளம் சட்டமன்ற உறுப்பினர்" என்ற விருதை வழங்குகிறது. இந்நிகழ்ச்சி நாளை (22-02-2020) காலை புதுடெல்லியில் நடைபெற இருக்கின்றது.. இந்நிகழ்வில் கலந்துகொள்ள சென்றிருக்கின்ற மஜக துணைச் செயலாளர்கள் நாகை முபாரக் மற்றும் திருமங்கலம் சமீம் ஆகியோர், இன்று புதுடெல்லி ஜும்மா மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்ற கருப்பு சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING 21-02-2020
கோவை மாவட்ட மஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்!
பிப்.21., கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக பிப்.29 அன்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குடியுரிமை காக்கும் வாழ்வுரிமை மாநாடு நடக்கவுள்ளது. அது குறித்து இளைஞரணியின் மாநாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மஜக இளைஞரணி மாநில செயலாளர் அஸாருதீன், அவர்கள் தலைமையில் கோவை மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்சர், முன்னிலை வகித்தார் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஈரோடு ஃபாரூக், அவர்கள் மாநாட்டில் இளைஞரணியின் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் MH. அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கோவை சம்சுதீன், மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் பாருக், சிங்கை சுலைமான், இளைஞரணி மாவட்ட பொருளாளர் பிரோஸ், மாவட்ட துணை செயலாளர் செய்யது, பொள்ளாச்சி நகர இளைஞரணி செயலாளர் அலாவுதீன், உள்ளிட்ட மாவட்ட, பகுதி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாவட்டம் 20.02.2020
பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க! மு.தமிமுன் அன்சாரி MLA
சென்னை.பிப்.20, இன்று சட்டப் பேரவைக்கு வந்த மஜக பொதுச் செயலளார் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், "தமிழக ஆளுனரே.. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுங்கள்" என்ற பதாகை ஏந்தி வந்தார். இது எங்களின் நீண்ட நாளைய கோரிக்கை என்றும், தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் கூறினார். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம் 20-02-2020
ஈரோட்டில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து மாவட்டஆட்சியர்அலுவலகம்முற்றுகை! ஆயிரக்கணக்காணோர் திரண்டனர்!!
பிப்.20., குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்தும் அதை அமல்படுத்தமாட்டோம் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் ஈரோடு மாவட்ட அனைத்துக் கூட்டமைப்புகள் சார்பில்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சையது அஹமது பாருக், மாநில துணை செயலாளர் பாபுஷாஹின்சா, ஆகியோர் பங்கேற்று எழுச்சியுரை நிகழ்த்தினர். இப்போராட்டத்தில் அனைத்து சமூக அமைப்புகள், மற்றும் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மத்திய மாநில அரசுகளுக் கெதிராக பேரணியாக திரண்டு கோஷமிட்டவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி முன்னேறினர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஷபீக்அலி, மாவட்ட பொருளாளர் முகமது அலி, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷானவாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் எக்சான், மாவட்ட துணை செயலாளர்கள் பாபு, பக்கீர் முகம்மது, குளம் முஸ்தபா, மற்றும் மாவட்ட, நகர, பகுதி, கிளை, நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஈரோடு_மாவட்டம் 19.02.2020