டெல்லியில் ஜாமியாமில்லியா மாணவர்கள் பேரணி..! மஜக பொதுச்செயலாளர் மற்றும் தலைவர்கள் பங்கேற்பு..!


புதுடெல்லி.பிப்.21.,

இன்று தலைநகர் டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி மாணவர்கள், மாணவிகள், முன்னாள் மாணவர்கள் என அனைவரும் அமைதி பேரணி நடத்தினர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களுடன், பொருளாளர் ஹாருண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா ஆகியோரும் பங்கேற்றனர்.

இவர்களுடன் மாநில துணைச் செயலாளர்கள் ஷமீம் அஹ்மது, நாகை முபாரக் ஆகியோரும்
உடன் பங்கேற்றனர்.

அப்பகுதி முழுவதும் No CAA, No NRC, No NPR என்ற வாசகங்களும், அரச வன்முறைகளை கண்டித்து முழக்கங்களும் எழுதப்பட்டிருந்தன.

நிரந்தரமாக மாணவ, மாணவிகள் அந்த சாலை முழுவதும் கூடாரம் அமைத்து தங்கள் மீது நடத்தப்பட்ட போலிஸ் வன்முறைகளை கண்டித்து போராடி வருவதை பார்க்க முடிந்தது.

அந்த கடும் குளிரிலும் பெரும் கூட்டம் அமைதியாக, கட்டுக்கோப்பாக அணிவகுத்தனர்.

கடும் குளிரிலும் நெருப்பாய் தகிக்கிறது டெல்லியின் வீதிகள்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#டெல்லி_முகாம்
21-02-2020