கோவை மாவட்ட மஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்!

பிப்.21.,

கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக பிப்.29 அன்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குடியுரிமை காக்கும் வாழ்வுரிமை மாநாடு நடக்கவுள்ளது.

அது குறித்து இளைஞரணியின் மாநாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மஜக இளைஞரணி மாநில செயலாளர் அஸாருதீன், அவர்கள் தலைமையில் கோவை மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்றது.

மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்சர், முன்னிலை வகித்தார் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஈரோடு ஃபாரூக், அவர்கள் மாநாட்டில் இளைஞரணியின் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் மஜக மாவட்ட செயலாளர் MH. அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கோவை சம்சுதீன், மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் பாருக், சிங்கை சுலைமான், இளைஞரணி மாவட்ட பொருளாளர் பிரோஸ், மாவட்ட துணை செயலாளர் செய்யது, பொள்ளாச்சி நகர இளைஞரணி செயலாளர் அலாவுதீன், உள்ளிட்ட மாவட்ட, பகுதி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாவட்டம்
20.02.2020