மஜக பொள்ளாச்சி நகர நிர்வாகக் குழு கூட்டம்!!

image

கோவை.நவ.14.,மனிதநேய ஜனநாயக கட்சி பொள்ளாச்சி நகர நிர்வாகக்குழு கூட்டம் நகர செயலாளர் ராஜாஜெமீஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகர துணைச் செயலாளர்கள் முகமது உசேன், சாகுல் அமீது, அப்துல்கனி, இளைஞரணி செயலாளர் அன்சார், மாணவர் இந்தியா செயலாளர் அபுபக்கர் சித்திக், இளைஞரணி துணை செயலாளர்கள் அலாவுதீன்,  ஜான்ஸ்கான், இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் சாகுல்அமீது, வர்த்தகஅணி துணை செயலாளர் அன்வர்சாதிக், தொழிற்சங்க செயலாளர் சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

1.வருகின்ற டிசம்பர் 6 இரயில் நிலைய முற்றுகை போராட்டத்திற்கு அதிகமான மக்களை கலந்து கொள்ளச்செய்வது என முடிவுசெய்யப்பட்டது.

2.வருகின்ற 17.11.17 வெள்ளி அன்று செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது!

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாவட்டம்
14.11.17