ஓய்வின்றி மக்கள் சந்திப்புகள்! காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை….. நாகை MLA வின் தொடர் சந்திப்புகள்!

image

image

image

image

(தொகுப்பு_2)

கடந்த 1 மாதமாக டெங்கு பாதிப்புகள், மழை வெள்ள நிவாரணப் பணிகள் ஆகியவற்றின் காரணமாக நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நாகை தொகுதியில் தீவிர சுற்றுப் பயணங்கள் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.

அவருடன் துறை சார்ந்த அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும், மஜக மற்றும் அதிமுக கட்சியினரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (13.11. 17) காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை தொகுதியில் உள்ள திருமருகல் ஒன்றியம், நாகை ஒன்றியம் ஆகியவற்றிலுள்ள கிராமங்களுக்கும் நாகை- நாகூர் நகராட்சி பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இதர குறைகளை கேட்டு அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கட்சி சார்பற்று திமுக, கம்யூனிஸ்ட், த.மா.க, காங்கிரஸ், வி.சி.க, நாம் தமிழர், உள்ளிட்ட பிற கட்சிகளின் பிரமுகர்களையும் சந்தித்து அவர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் MLA அவர்களை சந்தித்து தொகுதி நலன் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

நேற்று தொடர்ந்து ஓய்வின்றி காலை முதல் இரவு லரை 11 மணி நேரம் மக்களை சந்தித்து மழை நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டது தொகுதி மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அவரை உற்சாகமாக வரவேற்று கருத்துகளை பரிமாறி கொண்டனர்.

இடையிடையே ரேஷன் கடைகள் ஆய்வு, அரசு பள்ளி கூட கட்டிடங்கள் ஆய்வு, கூட்டுறவு வங்கிகளுக்கு சென்று ஆய்வு, அரசு மருத்துவ சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவ மனைகளுக்கு  சென்று ஆய்வு செய்தார்.

இச்சந்திப்பில் MLA அவர்களுடன் நாகை முபாரக், திட்டச்சேரி ரியாஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலையரசன், மஞ்சை சதக்கத்துல்லா, நாகூர் ஹமீது ஜெகபர், ஏனங்குடி யூசுப்தீன், பிஸ்மி யூசுப், ஆறுமுக பாண்டியன், அல்லாபிச்சை, திருநாவுக்கரசு, இஸ்மாயில், நாகூர் ஜாஹீர் உசேன், நாகூர் சுரேஷ், கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் சுரேஷ், இப்ராகிம், தெத்தி ஆரிப், தெத்தி பாவா, ஷேக் மஸ்தான், நாகை சாகுல், அஜீஸ் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தகவல்;

#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
14.11.17.