அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் அவசர ஆணையை ரத்து செய்யவேண்டும்…! தமிழக அரசுக்கு மஜக துணைப் பொதுச் செயலாளர் கோரிக்கை..!!

image

(மஜக துணைப் பொதுச் செயலாளர் AK.சுல்தான் அமீர் வெளியிடும் அறிக்கை…)

எந்தவித அடிப்படையும் இல்லாமல் பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கும் விதமாக தமிழக அரசு அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன பயன்பாட்டின் போது வைத்திருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருப்பது மிகவும் கண்டனத்திற்க்குரியது.

கட்டுப்பாடு என்கிற பெயரில் பொதுமக்களிடம் பணம் பறிக்கவே இந்த ஆணை பயன்படும்.

இந்த சட்டத்திற்க்கும், விபத்துகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது சராசரி அறிவுள்ளவர்களுக்கே புரியும் போது, அரசு ஆணைக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரிகளுக்கு புரியாமல் இருப்பது ஆச்சிரியமே.

அசல் உரிமம் வைத்திருந்தால் விபத்து குறையும் என்பது எவ்வித வகையிலும் அடிப்படையற்றது. ஏற்கனவே தெர்மாகோல் விஷயத்தில் அரசு கடும் விமர்சனத்திற்க்குள்ளானதையும், அதேபோல்  அடிப்படையற்ற, மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் இந்த ஆணையும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்குள்ளாகும் என்பதையும் புரிந்து தமிழக அரசு தேவையற்ற இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுகொள்கிறேன்.

இவன்;
AK.சுல்தான் அமீர்
மாநில துணைப் பொதுச்செயலாளர்.
மனிதநேய ஜனநாயக கட்சி.
29.08.17