You are here

மஜக திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட காவல் ஆணையாளருடன் சந்திப்பு…!

திருப்பூர்.ஆக.19., இன்று திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த அமைத்திக்கான கூட்டம் மாவட்ட கமிஷ்னர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டம் நிறைவு பெற்றதும் தனிப்பட்ட முறையில் கமிஷனர் நாகராஜ் அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.

திருப்பூரில் தற்போது நிலவும்
போக்குவரத்து நெருக்கடி,
சட்டம் ஒழுங்கு, சமூக அவலங்கள் குறித்த முக்கிய மூன்று கோரிக்கைகளை நேரடியாக ஆணையாளரிடம் தெரிவித்தனர்.

இது குறித்த தகவல்களை ஆச்சரியத்துடன் கேட்ட ஆணையாளர். அருகிலிருந்த உயர் அதிகாரிகளிடம் கேட்டு உறுதி படுத்திக்கொண்டார்.

நீங்கள் குறிப்பிட்ட மூன்றுமே முக்கியமான கோரிக்கைகள்,
இதில் உடனடியாக கவனம் செலுத்தப்படும் என தனி குறிப்பேட்டில் குறித்துக்கொண்டார்.

தொடர்ந்த ஆணையாளர் அவர்கள் மஜக நிர்வாகிகளிடம்
இது குறித்து விரைவில் நடவடிக்கைகள் இருக்கும் என உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின் போது மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி, மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அஹமது, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்கள் அபுதாஹீர், J.மீரான், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் காதர் கான் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
திருப்பூர் மாவட்டம்.
19_08_2017

Top