மஜக வடகிழக்கு மண்டல கூட்டம்.. காணொளி கூட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

ஜனவரி 8, கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மண்டல வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் திட்டமிடல் கூட்டங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன.

இன்று மாலை வடகிழக்கு மண்டல ஆலோசனை கூட்டம் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம், தலைமையில் காணொளி (zoom) வழியே நடைபெற்றது.

இதில் கடலூர் ( தெற்கு ) கடலூர் (வடக்கு) விழுப்புரம் (தெற்கு ) விழுப்புரம் (வடக்கு) கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று நடைபெற்று வரும் பணிகள் குறித்து விளக்கினர்.

இதில் பங்கேற்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது பேசும் போது, ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக , மஜக முன்னெடுத்திருக்கும் இப்போராட்டம் மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுக்க வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாகவும் கூறினார்.

நாம் வலிமைப்படுத்தியிருக்கும் இக்கோரிக்கையை முன்னிறுத்தி பல கட்சிகள் அமைப்புகள் தற்போது போராட்டம் நடத்தி வருவதும், ஆதரவு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றி வருவதும் , அரசு இதற்காக ஆணையம் அமைத்திருப்பதும் மஜக வின் முன் முயற்சிகளுக்கு கிடைத்த அங்கீகாரங்கள் என்றும் கூறினார்.

நிறைவாக அழைப்பிதழ் பணிகள்,அடிப்படை பணிகளுக்கான நன்கொடை சேகரிப்பு, வாகன முன்பதிவு ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.

இம்மண்டலத்திலிருந்து பேருந்து, வேன், கார் உட்பட 200 க்கும் அதிகமான வாகனங்களில் புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
02.01.2022