You are here

ஜன-08 கோவை சிறை முற்றுகை போராட்டம்..! புதுகை மேற்கு மாவட்ட மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்…!!

#மனிதநேய_ஜனநாயக_கட்சி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் சார்பில் புதுக்கோட்டையில் நேற்று 15/12/2021 புதன்கிழமை ஜனவரி 08 அன்று கோவையில் நடைபெறும் சிறைவாசிகள் விடுதலை தொடர்பான சிறை நிரப்பும் போராட்ட ஆயத்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச்செயலாளர் துரை முஹம்மது அவர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

1. எதிர்வரும் ஜனவரி 08 ந்தேதி அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவையில் நடைபெறவிருக்கும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஜாதி, மத, வழக்கு பேதமின்றி அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டத்தில் புதுக்கோட்டை மேற்கு மாவட்டத்தின் சார்பில் நூற்றுக்கணக்கானோர் ஏராளமான வாகனங்களில் சென்று கலந்துகொள்வது என்றும்…

2. புதுக்கோட்டை தலைமை அரசு மருத்துவமனையை பொதுமக்களின் நலன் கருதி மீண்டும் அதே இடத்தில் அமைத்திட வேண்டும் என்றும்…

3. புதுக்கோட்டை நகர் முழுவதும் சுற்றித்திரியும் ஆடு, மாடுகள், நாய்களை நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்றும்…

4. புதுக்கோட்டை நகர் முழுவதும் கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்து முறையாக கழிவுநீர் சென்றடைய நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்…

என்பன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ரஹீம்தாலிஃப், மாவட்ட மருத்துவ சேவை அணிச்செயலாளர் சீனிவாசன், மாவட்ட விவசாய அணிச்செயலாளர் சலீம், ஆறாங்கல் கிளை செயலாளர் சேகர், புதுகை நகர செயலாளர் முஹம்மது நிஷார், பொருளாளர் கரீம், துணைச்செயலாளர் உமர், மற்றும் கணபதி, செல்வின் ராஜ் , கலிபுல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர செயலாளர் முஹம்மது நிஷார் நன்றி கூறினார்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_புதுக்கோட்டை_மேற்கு_மாவட்டம்
15.12.2021

Top