குடியாத்ததில் மஜக இரண்டாம் ஆண்டு துவக்க விழா!

image

image

வேலூர் (மே).பிப்.28., குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நகர செயலாளர் எஸ்.அணீஸ் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் வேலூர் மேற்கு  மாவட்ட செயலாளர் ஜே.எம்.வசிம் அக்ரம் அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் கொடியினை ஏற்றிவைத்தும், மரக்கன்றுகளை நாட்டும், உறுப்பினர் சேர்க்கையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் SMD.நவாஸ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.Y.ஆரிப், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஷாநவாஸ், மருத்துவ அணி மாவட்ட பொருளாளர் S.M.நிஜாமுதீன், நகர பொருளாலர் முபாரக் அஹமத், நகர துணை செயலாளர்கள்
இர்பான், சலீம்  மற்றும் நகர இளைஞர் அணி செயலாளர் முஹம்மத் கவுஸ், இளைஞர் அணி து.செயலாளர் M.பாலாஜி , நகர ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(MJK IT WING)
வேலூர் மேற்கு  மாவட்டம்.
28.02.17