மஜக பெரம்பலுர் மாவட்ட சிறப்பு நிர்வாக குழு கூட்டம்!

பெரம்பலூர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தாழம்பாடி முஜிப் ரஹ்மான், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும், நிர்வாக கட்டமைப்புகள் குறித்தும், அணி நிர்வாகங்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய கிளைகளை உருவாக்குவது குறித்தும், உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்தும், புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்தும், உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்வது குறித்தும், விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் மாயவேள்‌, மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் ஜஹாங்கீர் பாஷா, மாவட்ட துணை செயலாளர் தமிமுன் அன்சாரி, மாவட்ட செய்தி தொடர்பாளர் சாகுல் ஹமீது, மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் இஸ்மாயில், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசப் ராஜா, முன்னாள் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஹக்கிம் பாஷா, மற்றும் ஜாகீர் உசேன்,
உமர் பாருக், ஆகியோர் கலந்து கொண்டனர்

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#பெரம்பலுர்_மாவட்டம்
22.11.2021