நம் பாரம்பரிய பண்புகளை கட்டிக்காக்க உறுதியேற்போம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

எம்மோடு சுற்றமும், நட்புமாக வாழும் இந்து சமுதாய சகோதர, சகோதரிகள் கொண்டாடி மகிழும் மற்றொரு தீபாவளி திருநாள் இது. இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகவும் இத்திருநாள் திகழ்கிறது.

இந்நாளில் சகிப்புத்தன்மை, நேசம், அரவணைப்பு போன்ற நம் பாரம்பரிய பண்புகளை கட்டிக் காக்க உறுதியேற்போம் என்று கூறி, இப்பண்டிகையை கொண்டாடும் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று வாழ மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
03.11.2021