விழுப்புரம் மண்டலம் சார்பாக இளைஞரணி பயிலரங்கம்…..! இணைப்பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி உரை….!

விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட விழுப்புரம் வடக்கு-தெற்கு, கடலூர் வடக்கு-தெற்கு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் #இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் இணையவழியில் இளைஞரணி மாநில செயலாளர் அஸாருதீன் தலைமையில் நடைப்பெற்றது.

மஜக #இணைப்பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்கள் இளைஞரணி பணிகள், கட்சிக்கு இளைஞரணியின் தேவைகள் குறித்து பேசினார். இளைஞரணி மெல்ல மெல் வீரியமடைவதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

முன்னதாக மாநில துணைச்செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் அவர்கள் மஜக மாவட்ட செயலாளர்களிடம் கருத்துகளை கேட்டறிந்து விழுப்புரம் மண்டலம் சார்பாக பயிலரங்கம் நடத்துவது குறித்தும், மாவட்டம் முழுவதும் இளைஞரணி நிர்வாகத்தை அமைப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஐந்து மாவட்ட நிர்வாகிகள், இளைஞரணி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_தலைமையகம்
01.11.21