உபியில் ஃபாஸிஸ்ட்டுகளால் விவசாயிகள் படுகொலை.. தஞ்சையில் அலைபேசி விளக்குகளை எரியவிட்டு இரங்கல்… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கும்பூரில் #பாஜக மற்றும் அவர்களின் ஆதரவு கும்பலால் #விவசாயிகள் திட்டமிட்டு கொல்லப்பட்டிருப்பது நாடெங்கிலும் அதிர்ச்சியையும், கிளர்ச்சியையும் உருவாக்கியிருக்கிறது.

அதுவும் விவசாயிகளை திட்டமிட்டு வாகனம் ஏற்றி சொல்லும் வீடியோ காட்சிகள் வலைதளங்கள் மூலம் பரவி கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது

இச்சம்பவத்திற்கு தமிழகத்தில் மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் கடும் கண்டத்தை வெளிப்படுத்தின.

உ.பி.யில் சமாஜ்வாடி கட்சியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்க, கம்யூனிஸ்ட் கட்சிகளும் களமிறங்கியுள்ளன.

இதனிடையே தமிழக விவசாயிகளின் இதயப் பகுதி என கருதப்படும் டெல்டாவில், மனிதநேய ஜனநாயக கட்சி விவசாயிகளை அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.

முன்னோட்டமாக ஒன்றுபட்ட டெல்டா வின் தலைநகரான தஞ்சாவூரில் இரங்கல் நிகழ்வை முன்னெடுத்துள்ளது.

உ.பி.யில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவித்து இன்று தஞ்சை ரயிலடியில் ° அலைப்பேசி விளக்குகளை எரியவிட்டு “இரங்கல் நிகழ்வு நடைபெற்றது.

இதற்கு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு, விவசாய சங்க பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர்.

அனைவர் கரங்களிலும் ஃபாசிஸ்ட்டுகளை கண்டிக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தினாலான பதாகைகளை தூக்கி நின்றனர்.

குறுகிய கால ஏற்பாட்டிலும், பெண்களும் வருகை தந்திருந்தனர்.

முன்னதாக உ.பி. விவசாய விரோத கொலைவெறியாட்டத்தை கண்டித்து , ஃ காவி மதவெறி கும்பலுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி முழக்கங்களை எழுப்பி தொடங்கி வைத்தார்.

சரியாக மாலை 6 மணிக்கு அலைபேசி விளக்குகளை ஒளிர விட்டு 5 நிமிடம் வரை மௌனம் கடைப்பிடிக்கப்பட்டு ஆழ்ந்த இரங்கலை அனைவரும் வெளிப்படுத்தினர்.

அது தஞ்சையின் பரபரப்பு மிகுந்த முக்கிய பகுதி என்பதால், திரளான பொதுமக்கள் கூடி நின்று கவனித்தனர். பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களும் உற்று நோக்கினர்.

இந் நிகழ்வில் மஜக மாநில துணைச் செயலாளர் வல்லம்.அகமது கபீர் , விவசாய அணி மாநில செயலாளர் அப்துல் சலாம், கொள்கை விளக்க அணி மாநில துணைச் செயலாளர் காதர் பாட்ஷா, மாநகர மாவட்ட செயலாளர் ஜப்பார், திருச்சி மாவட்ட செயலாளர் பேரா.மைதீன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் பொதக்குடி ஜெய்னுதீன் ,தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் பஷீர் அகமது , தஞ்சை மாநகர மாவட்ட பொருளாளர் உமர் அப்துல்லா, மாவட்ட துணைச் செயலாளர் சேட்டு (எ) ஹபீப் ரஹ்மான் மற்றும் மாநகர நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் Dr.பாரதி செல்வன், மணிமொழியன், வைகறை, ரமேஷ் , முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

உணர்வுப்பூர்வமான ஒரு நிகழ்வை , சரியான நேரத்தில்,தஞ்சை மாநகர மஜகவினர் உற்சாகமாக ஒருங்கிணைத்ததை விவசாய பிரதிநிதிகள் பாராட்டினர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்