திருப்பூண்டியில் மஜக சார்பில் சுதந்திரதின கொண்டாட்டம்! இணையவழி சேவையை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி உற்சாகம்!!

75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூண்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மூன்று இடங்களில் தேசிய கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் J .ஷாகுல் ஹமீது தலைமையில், மாவட்ட துணை செயலாளர் M.சபுருதீன் மற்றும் விவசாய அணியின் மாவட்ட செயலாளர் V.ஜெக்கரியா ஆகியோர் கொடிகளை ஏற்றினர்.

தொடர்ந்து மஜக சார்பில் ஆதார் அட்டை, பான் கார்டு இணைத்தல், கணினி சிட்டா நகல் எடுத்தல் உள்ளிட்டவை சேவைகளை மாலை வரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய, கிளை, அணி நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.