மதுக்கூரில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மஜகவினர் போராட்டம்!துணை பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா கண்டன உரை நிகழ்த்தினார்!


டிச.14.,

டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதை தொடர்ந்து தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூரில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, அவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை சேக், கண்டன கோஷம் முழக்கமிட்டார்.

துணை பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில விவசாய அணி செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம், ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

இதில் மதுக்கூர் நகர செயளாலர் ரிபாஃயூதீன், நகர பொருளாளர் பைசல் அஹமது, துணை செயளாலர் சாகுல் ஹமீது, இளைஞரணி செயளாலர் சதாம் உசேன், துணை செயலாளர் யஹ்யா, அதிரை நகர செயலாளர் அப்துல் சமது, அதிரை நகர துணை செயலாளர் மர்ஜூக், மற்றும் தோழமை கட்சியினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்
14.12.2020