டிச.14.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர்
அ.ஜாஹீர் உசேன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் A.R.சாகுல் ஹமீது, அவர்கள் பங்கேற்று, மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாக கட்டமைப்புகள் குறித்தும், நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும் இக்கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் தூத்துக்குடி மாநகர பகுதியில் சாலைகள் சீர்குலைந்துள்ளது அதனை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டு மென்று மாவட்ட நிர்வாகத்தை மனிதநேய ஜனநாயக கட்சி கேட்டுக்கொள்கிறது.
புரெவிப் புயலால் ஏற்ப்பட்ட மழையால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது
அதனை உடனடியாக அகற்றாத மாநராட்சி நிர்வாகத்தை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஆகிய தீர்மானங்கள்
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில்
மாவட்ட துணைச் செயலாளர்கள் காதர் பாட்ஷா, முகம்மது நஜிப், ராசுக்குட்டி, முன்னாள் மாணவர் இந்தியா செயலாளர் பைஸ், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாகிப், ஸ்ரீவை குண்டம் ஒன்றிய செயலாளர் வேல் முருகன்,காயல் பட்டினம் நகர பொருளாளர் மீரான் துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்ஷா, தூத்துக்குடி மாநகர பொறுப்பாளர் நைனா முகம்மது, வடக்கு ஆத்தூர் கிளை பொறுப்பாளர் இபுராஹீம், ஸ்ரீவை குண்டம் கிளை பொறுப்பாளர் பிரபு,
ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தூத்துக்குடி_மாவட்டம்
13-12-2020