அதிகாரிகளை உருவாக்கும் பயிற்சி மையம்! தமிழகத்திற்கு இளையான்குடி வழிகாட்டுவதாக மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA புகழாரம்!


சிவகங்கை.டிச 14.,

இளையான்குடியில் சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து வெற்றிப்படி என்ற பயிற்சி மையத்தை உருவாக்கியுள்ளனர்.

IAS, IPS, IFS, TNPSC உள்ளிட்ட தேர்வுகளுக்கு சிறுபான்மை சமுதாய மக்களை தயார்படுத்தி பயிற்சியளிக்கும் நோக்கோடு இம்மையம் சேவைக் கட்டணத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதன் தொடக்க விழாவில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அப்துல் கலாம் 2020 விஷன் அமைப்பின் தலைவர் பேரா.செந்தூரன், மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, pfi மாவட்ட தலைவர் அப்பாஸ் அலி, உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

மஜக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பேசும் போது, 75 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப்பள்ளியும், 50 ஆண்டுகளுக்கு முன் கல்லூரியையும் உருவாக்கிய இவ்வூரில், இப்படிப்பட்ட பயற்சி மையம் ஏன் இதுவரை தொடங்கப்படவில்லை என தான் நினைத்ததாகவும், அது இப்போது நிறைவேறியிருப்பதாகவும் கூறினார்.

பேரா. செந்தூரன் பேசும் போது, அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களை லட்சிய கனவு காண வேண்டும் என வழிகாட்டியதோடு, அவர்களை தலைவர்களாக உயர்த்த வேண்டும் என கனவு கண்டதாகவும் கூறி, ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார்.

நிறைவுரையாற்றிய பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இளையான்குடி மக்களின் கல்வி விழிப்புணர்வை மனமார பாராட்டினார்.

உத்தமபாளையத்தில் கருத்தராவுத்தர் அப்பா தன் சொத்துக்களை தானமாக தந்து அங்கு ஒரு கல்லூரியை உருவாக்கினார்.

அதிராம்பட்டினத்தில் காதர் மொகைதீன் அப்பா தன் சொத்துக்களை தானமாக வழங்கி ஒரு கல்லூரியை உருவாக்கினார்.

சென்னை புதுக்கல்லூரி, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி ஆகியன காயிதே மில்லத் அவர்களின் முன் முயற்சியில் பலரிடமும் நன்கொடை பெற்று உருவாக்கப்பட்டது.

ஆனால் இளையான்குடியில் ஊர் மக்களே ஒன்று சேர்ந்து, நிதி திரட்டி, ஒரு கல்லூரியை உருவாக்கி அனைவருக்கும் கல்வி தந்தார்கள். பள்ளிக்கூடங்களை உருவாக்கினார்கள். மற்ற ஊர்களுக்கு இது முன்னுதாரணமாகும்.

இப்போது அதிகாரிகளை உருவாக்கும் பயிற்சி மையத்தை உருவாக்கி, தமிழகத்திற்கு வழிகாட்டியுள்ளனர்.

அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பேரா. ஜெய்னுல் ஆபிதீன், ஜாகிர் உசேன் கல்லூரி முன்னாள் முதல்வர் செய்யது உசேன் ஆகியோரும் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா நாசர், துணைப் பொதுச் செயலாளர் மண்டலம்.ஜெய்னுல் ஆபீதீன், மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர் பொறியாளர் சைஃபுல்லாஹ், விவசாய அணி மாநில செயலாளர் அப்துல் சலாம், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) மாநில துணைச் செயலாளர் சாகுல் ஹமீது சேட்டு, சிவகங்கை மாவட்டச் செயலாளர் சல்லை ஹாஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே. பஷீர் அஹமது, மாவட்ட துணைச் செயலாளர் ஜெய்னுலாப்தீன், நகரச் செயலாளர் உமர் கத்தாப் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#சிவகங்கை_மாவட்டம்
13-12-2020