மஜக குமராட்சி ஒன்றிய துணை செயலாளர் இல்ல திருமண விழா..!! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்பு..!!


சிதம்பரம்.மார்ச்.24.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டம் குமராட்சி ஒன்றிய துணை செயலாளர் காசிம் இல்ல திருமண விழா சிதம்பரத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்கள்.

மேலும், மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு பெற்ற சிதம்பரம் தொகுதி முஸ்லிம் லீக் வெற்றி வேட்பாளர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது அவர்கள் திருமண மண்டபத்தில் வாக்குகளை சேகரித்தார்.

இத்திருமண விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் மண்ணிவாக்கம் யூசுப், மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், இக்பால், கியாசுதீன், மாவட்ட MJVS செயலாளர் முஹம்மது ஹம்ஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் நைனா முகம்மது, மாவட்ட MJTS செயலாளர் பாஷா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸரப், மாவட்ட துணை செயலாளர் பைசல், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் காஜா மைதீன், நகர நிர்வாகிகள் ஹபிபுல்லா, சதாம், தமீம், மோத்தி அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்
24.03.2021