சிதம்பரம்.மார்ச்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டம் குமராட்சி ஒன்றிய துணை செயலாளர் காசிம் இல்ல திருமண விழா சிதம்பரத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்கள். மேலும், மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு பெற்ற சிதம்பரம் தொகுதி முஸ்லிம் லீக் வெற்றி வேட்பாளர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது அவர்கள் திருமண மண்டபத்தில் வாக்குகளை சேகரித்தார். இத்திருமண விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் மண்ணிவாக்கம் யூசுப், மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், இக்பால், கியாசுதீன், மாவட்ட MJVS செயலாளர் முஹம்மது ஹம்ஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் நைனா முகம்மது, மாவட்ட MJTS செயலாளர் பாஷா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸரப், மாவட்ட துணை செயலாளர் பைசல், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் காஜா மைதீன், நகர நிர்வாகிகள் ஹபிபுல்லா, சதாம், தமீம், மோத்தி அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கடலூர்_தெற்கு_மாவட்டம் 24.03.2021
திருமண விழா
அண்ணாதிராவிட கழகத்தின் சிறுபான்மை அணி செயலாளர் இல்ல திருமணவிழா..! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது வாழ்த்து..!!
மார்ச்.17, அண்ணா திராவிட கழகத்தின் சிறுபான்மை அணி செயலாளர் விழுப்புரம் இப்ராஹிம் அவர்களின் இல்ல திருமண விழா சிறப்பாக நடைபெற்றது. இத்திருமண விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் அண்ணா திராவிட கழகத்தின் தலைமை கழக செயலாளர் சிவராஜ் , பாட்டாளி மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மலர் சேகர் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவ்விழாவில் விழுப்புரம் மஜக மாவட்ட செயலாளர் ரிஸ்வான் , பொருளாளர் செளகத் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் மன்னிவாக்கம் யூசுப் , மாவட்ட துணைச் செயலாளர் முபாரக் , ஆதம், ஷாகுல், திண்டிவனம் நகர செயலாளர் ரபிக் மற்றும் நகர, கிளை நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #விழுப்புரம்_மாவட்டம்.
நெய்வேலியில் மஜக இல்ல திருமண விழா..! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று வாழ்த்து..!!
நெய்வேலி., பிப்.22 மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் A.மன்சூர் அலி அவர்களின் திருமண விழா நெய்வேலி கஸ்தூரி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இத்திருமண விழாவில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், தலைமை கழக பேச்சாளர் மன்சூர் அஹமத், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரியாஸ், ரபீக், மாவட்ட MJVS செயலாளர் எள்ளேரி ஊராட்சி மன்ற துணை தலைவர் AMK முஹம்மது ஹம்ஜா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஹம்மது முஸ்ரப், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப், மாவட்ட துணைச் செயலாளர்கள் A.ரியாஸ் அஹ்மத், சலீம் , அஜ்மீர், யாசின் , நகர செயலாளர் நூர் முஹம்மது, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் அக்பர் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கடலூர்_வடக்கு_மாவட்டம் 22.02.2021
வீரசோழனில் மஜக இல்ல திருமணம்..!! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று வாழ்த்து..!!
தஞ்சை. பிப்,22 மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் முகைதீன் அவர்களின் இல்ல திருமண விழா வீரசோழனில் சிறப்பாக நடைபெற்றது. இத்திருமண நிகழ்வில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மேலும், இத்திருமண விழாவில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை ஷேக் மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் வீரசோழன் நகர நிர்வாகிகள், தொழிலதிபர் ஜீங்கா கோல்டு நிறுவனர் I.M.ஹனிப் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_மாநகர்_மாவட்டம் 21.02.2021
குடந்தையில் மஜக இல்ல திருமண விழா! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வாழ்த்துரை!!
பிப்.21, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணை செயலாளர் குடந்தை ஆசாத் இல்ல திருமணம் மணமக்கள் H.முகம்மது ஜாஃப்ரின் - H.இர்ஃபானா இடையே நிக்காஹ் குடந்தையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார். இத்திருமண நிகழ்வில் இராமலிங்கம் MP, சாக்கோட்டை அன்பழகன் MLA, இராம.இராமநாதன் Ex.MLA, முஸ்லீம் லீக் மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான், தொழிலதிபர் நோபில் மரைன் ஷாகுல் ஹமீது உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பொதுச் செயலாளருடன் மாநில செயலாளர் ராசுதீன், MJVS மாநில செயலாளர் யூசுப் ராஜா, மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா, மாநில மருத்துவ சேவை அணி துணை செயலாளர் முஹம்மது மஃரூப், மாவட்ட செயலாளர் ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தஞ்சை_வடக்கு_மாவட்டம்.