You are here

தற்போதைய அரசியல் சூழ்நிலை மஜக நிலைப்பாடு என்ன.?

பிப்.08., தற்போதைய தமிழக அரசியல் சூழலலில் மனிதநேய ஜனநாயக கட்சி யினுடைய நிலைப்பாடு அனைவராலும் எதிர்ப்பார்கப்படுகிறது.தற்போதைய அதிமுக ஆட்சி 5 ஆண்டு காலம் முழுமையாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதே நமது எண்ணமாகும்.

திராவிட கட்சிகள் பலகினமடைய கூடாது என்பதும் நமது நோக்கங்களில் ஒன்றாகும்.

ஒரு கட்சியின் MLA க்கள் தான் தங்களின் முதல்வரை தேர்தெடுக்க முடியும்.இந்த அடிப்படையில் அதிமுக MLA க்கள் இன்று கூடி தங்களது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இந்நிலையில் சட்டப்படி ஆளுனர் அதிமுக MLA க்களின் கோரிக்கையை செயல்படுத்த வேண்டும்.

இதை தட்டிக்கழிப்பது ஜனநாயக விரோத செயலாகும்.

இந்நிலையில் மஜக அதிமுகவோடு பூண்டுள்ள தோழமையை தொடர விரும்புகிறது.அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அம்மையார் தான் என அதிமுகவின் பொதுக்குழு ஏற்கனவே தீர்மானித்து விட்டது அது இப்போதும் தொடர்கிறது. எனவே சட்டப்படி அதிமுக யார் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அவர்களுக்கே ஆதரவளிப்பது என மஜக வின் தலைமை நிர்வாகக்குழு தீர்மானித்திருக்கிறது.

அந்த வகையில் வழக்கம் போல் தனித்தன்மையை இழக்காமல் நமது தோழமை பயணம் அதிமுகவோடு தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மஜக தலைமையகம்
08_02_17