You are here

இளையான்குடி தேவூரணியை தூர்வாரக்கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்த மஜக!

image

பிப்.06., சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரில் அமைந்துள்ள தேவூரனியை தூர்வாருவது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரை 05.02.2017 அன்று மாலை மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை கேட்டகொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஏற்கனவே மஜகவினர் ஊரனியை சுத்தம் செய்ததற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

எதிர்வரும் புதன் கிழமை அன்று ஊரனியை நேரடியாக வந்து பார்ப்பதாகவும். மாவட்ட ஆட்சியரின் அனுமதிக்குட்பட்ட தொகைக்குள் (10 லட்சத்திற்குள் எஸ்டிமேட்) வந்தால் உடனே அனுமதியளிப்பதாக உறுதியளித்தார்.

மேலும் நகரில் அதிகரித்து வரும் வெறிநாய்கள் பற்றியும் ஆட்சியரிடம் எடுத்து கூறப்பட்டது. அதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இந்த சந்திப்பில் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுதலைவர் சைஃபுல்லாஹ், மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்ட துனைச்செயலாளர் அப்துல் ரஹ்மான், நகர் துனைச்செயலாளர்கள் செய்யது மஹபு சிராஜுதீன் மற்றும் ஜமால் முஹம்மது ஆகியோர் கலந்து கொன்டனர்.

தகவல்
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
(#MJK_IT_WING)
சிவகங்கை மாவட்டம்
06-02-2017

Top