ஈரோடு :டிச.31.,
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ஈரோடு மாநகா் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளா் ஷபிக் அலி, அவர்கள் தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளா் முகமது அலி, மாவட்ட துணை செயலாளா்கள் ஆடிட்டா் ரியாஸ், ஆட்டோ பாபு, MJTS மாவட்ட தலைவா் சபா் அலி, MJVS மாவட்ட செயலாளா் சிராஜ், மாணவா் இந்தியா மாவட்ட தலைவா் யாசா், துணை தலைவா் பயாஸ்தின்,
ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷாநவாஸ், மேற்கு மாவட்ட பொருளாளர்
பவானி சாதிக் பாஷா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்சா, அவர்கள் துவக்க உரையாற்றினார்.
இதில் மாநில பொருளாளா் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் பங்கேற்று மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக நிறைவேற்றியுள்ள, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவளிக்கும் கொடிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கண்டன உரையாற்றினார்.
மேலும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினா் கணேச மூா்த்தி, மஜக துணை பொதுச் செயலாளர் செய்யது முகம்மது பாரூக், திமுக மாநகர செயலாளா் மு.சுப்பிரமணியம், ஆகியோரும் கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை, நிர்வாகிகள், பல்வேறு கட்சியினர், மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
இறுதியில் மாவட்ட துணை செயலாளா் பக்கீா் முகமது, நன்றியுரை நிகழ்த்தினாா்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_மாநகா்_மாவட்டம்
30.12.2020