பிலிப்பைன்சிலிருந்து தமிழக மாணவர்கள் நாடு திரும்புகின்றனர்! மஜக முயற்சிக்கு வெற்றி!


டிச 31,

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு மருத்துவம் படிக்க சென்ற தமிழக மாணவர்கள் மணிலா விமான நிலையத்தில் தவித்த செய்தி மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் கவனத்திற்கு வந்தது.

அவர் நேற்று தலைமைச் செயலாளர் திரு.சண்முகம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்திய வெளியுறவு துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதனடிப்படையில் தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இன்று காலை தமிழக முதல்வரின் தனி செயலாளர் திரு. செந்தில் IAS அவர்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களிடம் தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும், அவர்களில் 60 பேர் இன்று நாடு திரும்புவார்கள் என்றும் மீதி 30 பேர் அடுத்தடுத்து திரும்புவார்கள் என்றும் தெரிவித்தார்.

தலைமைச் செயலாளரை தொடர்பு கொண்டு பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மஜகவின் சார்பில் அவருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அயலக தமிழர்களின் நலன் காக்கும் மஜக வின் முயற்சிகள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
31.12.2020