வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தென்காசியில்மஜகவினர் ஆர்ப்பாட்டம்! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் கண்டன உரையாற்றினார்!


தென்காசி.டிச.27.,

மத்திய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மனிதநேய ஜனநாயக கட்சி தென்காசி மாவட்டம் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மஜக மாவட்ட செயலாளர் M.பீர் மைதீன், தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் முகமது இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர்கள் பொன்னானி அபுதாஹீர், வாவை A.இனையதுல்லா, பண்பொழி R.அபுதாஹிர், விவசாய அணி மாவட்ட செயலாளர் அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மஜக மாநில துணை பொதுச் செயலாளர் கோவை A.K. சுல்தான் அமீர், அவர்கள் பங்கேற்று வேளாண் சட்டங்களின் பாதிப்பு குறித்தும் விவசாயிகளை வேளாண் சட்டங்கள் எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்தும் கண்டன உரையாற்றினார்.

மேலும் மஜக மாநில துணை செயலாளர் A.R.சாகுல்ஹமீது, இஸ்லாமிய கலாச்சார பேரவை மாநிலச் செயலாளர் லேனா இஷாக், தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு நெல்லை மண்டல செயலாளர் செல்லத்துரை, திராவிடர் தமிழர் கட்சி மாநில பொதுச் செயலாளர் கதிரவன், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி் மாவட்ட செயலாளர் முகமது நயினார், AIKN கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் மாவட்ட பொறுப்பாளர் ஷேக் மைதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இந்நிகழ்வில் இளைஞரணி மாவட்டச் செயலாளர் M.முஹம்மது இஸ்மாயில்,
மனித உரிமை அணி மாவட்டச் செயலாளர் சங்கை A.பீர் மைதீன், மருத்துவ சேவை அணி மாவட்டச் செயலாளர் மாஷா மஜித், மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் P.முகமது அன்சாரி, தொழிற்சங்க மாவட்ட தலைவர் P.ரவி, தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் அச்சன்புதூர் மகேஷ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளர் சிலம்பாட்டம் சாகுல் ஹமீது, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட பொருளாளர் கப்பிலி அப்துல் காதர், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணைச் செயலாளர் P.கமால் தீன், மாணவர் இந்தியா மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மாணவர் இந்தியா மாவட்ட துணைச் செயலாளர்கள் முகமது முஸ்தபா, அஜய் கார்த்தி, பாதுஷா, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
26-12-2020