டிச.21,
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் மூன்று சட்டங்களுக்கு எதிராக கோவை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மேட்டுப்பாளையத்தில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் VMT ஜாபர் தலைமை தாங்கினார்.
மஜக கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர் கோவை.நாசர் இச்சட்டத்தினால் விவசாயிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை விளக்கி இச்சட்டத்தை கொண்டு வந்த மத்திய பாஜக அரசிற்கு எதிராக கண்டன உரை நிகழ்த்தினார்.
இப்போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் நெளபல், PFI மாவட்ட பொது செயலாளர் காஜா, SDTU மாவட்ட தலைவர் முஹம்மது அலி, சமூக ஆர்வலர்கள் முஹம்மது அனிபா, ஹக்கீம் சேட் ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதில் மஜக மாவட்ட பொருளாளர்
M. காஜா மைதீன், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் M.ஆரிஃப் அப்பாஸ், A.ஷேக் மைதீன், MJTS மாவட்ட தலைவர் முஹம்மது அப்சல், பொருளாளர் காஜா, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் மன்சூர், IKP மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட நிர்வாகிகள் SMR பாரி, உமர் பாரூக், முஹம்மது நிவாஷ் மற்றும் கட்சியின் நகர, கிளை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாக கலந்துக் கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கோவை_வடக்கு_மாவட்டம்.
20/12/2020