You are here

ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ் விழா! தூத்துக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்பு!


டிச.21,

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கிறிஸ்தவ நல்லிணக்க இயக்கம் நடத்திய ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ் விழா நேற்று சிறப்பாக நடைப்பெற்றது.

தூத்துக்குடியில், KSPS மண்டபத்தில் நடைப்பெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மும்மத தலைவர்களும் பங்கேற்றனர்.

தொடர்ந்து காணொளி வழியாக நடைப்பெற்ற கருத்தரங்கில் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.

இந்நிகழ்வுகளில் தூத்துக்குடி நகர பொறுப்பாளர்கள் நைனா முஹம்மது, செல்வம் உள்பட மஜகவினர் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தூத்துக்குடி_மாவட்டம்.
20/12/2020

Top