மஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்.! துணை பொதுச்செயலாளர் NA தைமிய்யா தொடங்கி வைத்தார்..!


சென்னை.டிச.21.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம், சேப்பாக்கம் பகுதி சார்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாமை மஜக துணை பொதுச் செயலாளர் என்.ஏ.தைமிய்யா தொடங்கிவைத்தார், உடன் மீனவரணி மாநில செயலாளர் பார்த்திபன் உடனிருந்தார்.

முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் உறுப்பினர் படிவங்களில் கையொப்பமிட்டு தங்களை மஜக-வில் இணைத்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான், சேப்பாக்கம் பகுதி செயலாளர் தாஜுதீன், சேப்பாக்கம் பகுதி பொருளாளர் மொய்தீன் உள்ளிட்ட வார்டு, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாவட்டத்தில் தொகுதிவாரியாக தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான முகங்கள் நடத்துவதற்கான பணிகளை மஜக-வினர் முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்தியசென்னை_கிழக்கு_மாவட்டம்
20-12-2020