மஜக திருவாரூர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம்! மாநில செயலாளர் மற்றும் துணைச்செயலாளர் பங்கேற்பு!!


டிச.23,
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவாரூர் மாவட்ட சிறப்பு நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் PMA சீனி ஜெகபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் மற்றும் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் பங்கேற்று, மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாக கட்டமைப்புகள் குறித்தும், நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

மேலும், தலைமை அறிவித்துள்ள 75 நாட்கள் உறுப்பினர் சேர்க்கையின் இறுதிகட்ட முகாமை அனைத்து கிளைகளில் சிறப்பாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதில், மாவட்ட பொருளாளர் புலிவலம் ஷேக் அப்துல்லா, மாவட்ட அணி செயலாளர்கள் செய்யது மீரான், சித்திக், நஜ்புதீன், கட்டிமேடு ஆசிப் மற்றும் அத்திகடை காதர், பொதக்குடி ஜெயின், கட்டிமேடு அலீம், புலிவலம் அஹமத் ஜலால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.
22/12/2020