அக்.03.,
விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி நீலகிரி கிழக்கு மாவட்டம் குன்னூர் நகரம் சார்பில் நகரச் செயலாளர் சாதிக், அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாணவர் இந்தியா மாநில தலைவர் ஜாவித் ஜாபர், மற்றும் மாணவர் இந்தியா மாநில செயலாளர் பெரியார் கார்த்தி, மற்றும் நீலகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி, நகர செயலாளர் ஜீவா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்புச்சட்டங்கள் குறித்தும் அது விவசாயிகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து உரையாற்றினார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட அமைப்புக் குழு நிர்வாகிகள் கமாலுதீன், காலிப், அப்துல் ஹமீத், ரிஸ்வான், சாதிக், பைரோஸ், அஸ்லம் பாஜி, குன்னூர் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#குன்னூர்_நகரம்
#நீலகிரி_கிழக்கு_மாவட்டம்
02.10.2020