மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பொள்ளாச்சியில் பச்சை துண்டு அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மஜகவினர்!! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது அவர்கள் கண்டன உரையாற்றினார்!!


அக்.03.,

விவசாயிகளை பாதிக்கும் வகையில் மத்திய அரசு பாரபட்சத்துடன் நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அதைத் தொடர்ந்து கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் முஸ்தபா அவர்கள் தலைமையில், நடைபெற்றது.

இதில் தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் குனிசை ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், KA.பாருக், சிங்கை சுலமான், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது, அவர்கள் கண்டன உரையாற்றினார்.

அவர் பேசியதாவது இந்த தேசத்தில் ஒட்டு மொத்த மக்களை புறந்தள்ளிவிட்டு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக ஒரு ஆட்சி நடக்கிறதென்றால் அது மத்திய பாஜக வின் ஆட்சிதான், முதலில் நாம் வீடுகளில் உபயோகிக்கும் கேஸ் சிலிண்டர்களுக்கு உங்கள் வங்கிக் கணக்குகளில் மாணியம் தருகிறேன் என்று கூறி பிறகு தற்போது அதையும் நிறுத்தி விட்டார்கள் 400 ரூபாய்க்கு நாம் வாங்கிக்கொண்டிருந்த கேஸ் சிலிண்டர்கள் தற்போது 900 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

அது போல் தமிழகத்தில் யாரும் கல்வி பயின்று முன்னேறி விடக்கூடாது என்பதற்காக நீட் என்ற ஒரு கொடிய திருத்தத்தை கொண்டு வந்து எம் தமிழ்நாட்டினுடைய மாணவச் செல்வங்களை கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அது போல் தான் தற்போது மத்திய பாஜக அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டமும் இது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என வெளியில் கூறிக் கொண்டே மறுபுறம் அதை அளிக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது இது போன்ற மக்கள் விரோத ஆட்சியை நாம் புறந்தள்ளி அப்புறப்படுத்த வேண்டும், என்று பேசினார்.

இதில் கம்யூனிஸ்ட்,
மறுமலர்ச்சி திராவிட கழகம், ஆதி தமிழர் பேரவை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், பழனிபாபா அறக்கட்டளை, விவசாய சங்கம், உள்ளிட்ட கட்சி, மற்றும் இயக்கங்களின் பிரதிநிதிகள் உரையாற்றினர்.

இப்போராட்டத்தில் மாவட்ட , அணிகள், நகர, பகுதி, நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#பொள்ளாச்சி_நகரம்
#கோவை_மாநகர்_மாவட்டம்
02.10.2020