வெளிநாட்டு பயணிகளுக்கு விமானகட்டணத்தில் சலுகை : முதமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!

கொரோனா நெருக்கடி காரணமாக வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்புவர்கள், கடும் இழப்புகளுக்கிடையே வருகை தருகிறார்கள்.

இந்திலையில் அவர்களுக்கு விமானக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது சரியல்ல.

லண்டனிலிருந்து வருபவர்களுக்கு 50 ஆயிரம் கட்டணம் என நிர்ணயித்து விட்டு, அருகில் உள்ள மலேஷியாவிலிருந்து வருபவர்களுக்கு 30 ஆயிரம் என்பது நியாயமல்ல.

வளைகுடா நாடுகளிலிருந்து வருபவர்களுக்கும் விமான கட்டணம் அதிகமாக உள்ளது என்ற வருத்தமே நிலவுகிறது.

இவர்கள் அனைவரும் நமது நாட்டுக்கு அன்னிய வருவாயை ஈட்டித் தந்து, நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலு சேர்த்தவர்கள்.

இதை மத்திய அரசு இத்தருணத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

எனவே அவர்களுக்கான விமானப் பயணத்திற்கு 50 சதவீத கட்டண சலுகையை அறிவித்து அதை மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஈடுகட்ட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், ஏர் இந்தியா விமானங்களோடு, குறைந்த கட்டணத்தில் இயங்க விரும்பும் தனியார் விமான நிறுவனங்களையும் இச்சேவையில் அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA
#பொதுச்செயலாளர்,
#மனிதநேயஜனநாயககட்சி
07.05.2020