மாணவர் இந்தியா பதிவு செய்யப்பட்ட அமைப்பை யார் பயன்படுத்தினாலும் சட்ட ரீதியாக நடவடிக்கை !

ஜன.14., மாணவர் இந்தியா என்ற அமைப்பு மனிதநேய ஜனநாயக கட்சியின் கீழ் மாணவ அமைப்பாக பதிவுசெய்யப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்பின் பெயரை சிலர் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாகை தெற்கு மாவட்டம் திருப்பூண்டியில் நான்கு பேரை வைத்திற்குக்கும் தமுமுக மாணவர் இந்தியா என்ற பெயரில் கருத்தரங்கம் என்று அறிவித்தனர். உடனடியாக நமது மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து பதிவு செய்யப்பட்ட நகல்களை கொடுத்து புகார் அளித்தனர்.

துரிதமாக செயல்பட்ட காவல்துறை அந்த சரக காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தமுமுகவினரை அழைத்து கண்டித்துள்ளனர். மாணவர் இந்தியா பெயரை பயன்படுத்தக் கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

இதனால் தமுமுகவினர் சமூக நீதி மாணவர் பேரவை இந்தியா என்று பெயர் மாற்றிக்கொண்டு நிகழ்ச்சி நடத்துகின்றனர். இதே போன்று வேறு பகுதிகளில் தமுமுகவினர் மாணவர் இந்தியா என்ற பெயரை பயன்படுத்தினால் பகுதி நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் உடனடியாக காவல்துறையை தொடர்புகொண்டு புகார் கொடுத்து தடுத்து நிறுத்துங்கள்.

பதிவு செய்யப்பட்ட மாணவர் இந்தியா பெயரை பயன்படுத்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாணவ அமைப்புக்கே முழு அதிகாரம் உண்டு.

(கீழே இரண்டு போட்டோக்கள் பதிவு செய்துள்ளோம்.
1. தமுமுக மாணவர் இந்தியா என்று இருக்கும்.
2. மஜக நிர்வாகிகள் புகார் செய்தவுடன் சமூகநீதி மாணவர் பேரவை இந்தியா என்று வாசகம் மாற்றி அடிக்கப்பட்ட போஸ்டர்)

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு

16105535_740483972765877_2492481967229540701_n

16105754_740483966099211_4540405176557838193_n